பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளியினால் மண்சரிவு அபாயம்
பிலிப்பைன்ஸை தாக்கிய ஹகுபிட் சூறாவளியினால் நாட்டின் கிழக்கு பகுதியில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதன்காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நகரப்பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஹகுபிட் சூறாவளி காரணமாக பிலிப்பைன்சில் சுமார் 150 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஹகுபிட் சூறாவளியானது இன்று நாட்டின் வடபகுதியை தாக்கும் அபாயமுள்ளதால் அங்கிருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
மணித்தியாலத்திற்கு 195 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு பொருட்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி பெனிக்னோ அக்குய்னோ பணிப்புரை விடுத்துள்ளார்.
பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளியினால் மண்சரிவு அபாயம்
Reviewed by NEWMANNAR
on
December 07, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 07, 2014
Rating:


No comments:
Post a Comment