நுகர்வோர் சட்டங்களை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எதிர்வரும் பண்டிகை காலத்தில் நுகர்வோர் சட்டங்களை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு, விசேட சுற்றுவளைப்புகளை முன்னெடுக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவிக்கின்றது.
காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், பொருட்களின் விலைகளை மாற்றி விற்பனை செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஜே.எம்.எ.டக்லஸ் கூறுகின்றார்.
வருடாந்தம் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், தரமான பொருட்களை மக்கள் கொள்வனவு செய்வதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் அதிகார சபை குறிப்பிடுகின்றது.
இதேவேளை, தற்போதுள்ள அதிகாரிகளுடன், மேலும் 3 குழுக்களை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஈடுபடுத்தவுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கூறுகின்றார்.
இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் பொருட்களை விநியோகிக்கும் களஞ்சியசாலைகள் வத்தளை மற்றும் ஒருகொடவத்த பகுதிகளியே காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
அனைத்து மாவட்டங்களிலும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், 200 அதிகாரிகள் இதற்காக ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை சுட்டிக்காட்டுகின்றது.
நுகர்வோர் சட்டங்களை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
Reviewed by NEWMANNAR
on
December 11, 2014
Rating:

No comments:
Post a Comment