மீண்டும் ரிசாத்தின் அராஜகம் ஆரம்பம்-மன்னார் நகர முதல்வர் எஸ்.ஞானப்பிரகாசம்-படங்கள்
மன்னாரில் மீண்டும் முன்னால் அமைச்சரின் அராஜகம் ஆரம்பித்துள்ளதாக மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
மன்னார் பஸார் பகுதியில் உள்ள மன்னார் நகர சபைக்குச் சொந்தமான விளம்பரப்பலகையில் மன்னார் நகர சபையின் அனுமதி இன்றி விளம்பரம் பொருத்தப்பட்டுள்ளது.
குறித்த விளம்பரம் தேர்தல் காலத்தில் தயாரிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய ஜனாதிபதியாக மைத்திரி பால சிறிசேன தெரிவு செய்யப்பட்ட நிலையில் குறித்த விளம்பரம் அந்த விளம்பர பகையில் பொருத்தப்பட்டுள்ளது.
குறித்த விளம்பர பலகையில் முன்னால் அமைச்சர் றிஸாட் பதியுதீன்,தற்போதைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன,தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் காணப்படுகின்றனர்.
மன்னார் நகர சபையின் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட குறித்த விளம்பர பலகையை அகற்ற கோரிய போதும் இது வரை அவர்கள் எந்த நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை.
முன்னால் அமைச்சர் றிஸாட் பதியுதீனின் ஆதரவாளர்கள் சிலர் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.கடந்த காலத்தில் மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட அராஜகம் மீண்டும் அரங்கேர ஆரம்பித்;துள்ளது.
மன்னார் நகர சபைக்குற்பட்ட பகுதியில் இவ்வாறான அராஜகங்களை மேற்கொள்ள நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
எனவே சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட குறித்த தேர்தல் விளம்பர பலகையினை அகற்ற மன்னார் பொலிஸார் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் நகர முதல்வர் எஸ்.ஞனாப்பிரகாசம் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மீண்டும் ரிசாத்தின் அராஜகம் ஆரம்பம்-மன்னார் நகர முதல்வர் எஸ்.ஞானப்பிரகாசம்-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
January 10, 2015
Rating:
No comments:
Post a Comment