அண்மைய செய்திகள்

recent
-

பாப்பரசரின் வருகையையொட்டி விசேட போக்குவரத்து ஏற்பாடு

பரிசுத்த பாப்பரசரர் பிரன்ஸிஸ் காலை 9.45 மணிக்கு கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ள நிலையில் கொழும்பு கட்டு நாயக்க உள்ளிட்ட பகுதிகளில் விஷேட பாதுகாப்பு மற்றும் போக்கு வரத்து நடை முறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

திருத்தந்தையின் இலங்கை விஜயம் நேரலையில்http://www.newmannar.com/2015/01/live.html

266 ஆவது பாப்பரசர்
ஆர்ஜன்டீனாவிலிருந்து முதலாவது திருத்தந்தை
2013 ஆம் ஆண்டு நியமனம்
இலங்கை வரும் மூன்றாவது பாப்பரசர்
1970 இல் பாப்பரசர் 6 ஆம் சின்னப்பர் வருகை
1995 இல் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர்  வருகை

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் திருத்தந்தை நாளை செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார்.    நாளை இலங்கை வரவுள்ள  பாப்பரசர்    எதிர்வரும்  15 ஆம் திகதி  வியாழக்கிழமை  காலை வரை இலங்கையில் தங்கியிருப்பார்.

 பாப்பரசரின் இலங்கை விஜயத்தின் போது     காலி முகத்திடலில் விசேட ஆராதனை நடத்துதல்    ஜோசப் வாஸ்  அடிகளாரை   புனிதராக திருநிலைப்படுத்துதல் மற்றும்    மடு தேவாலயத்துக்கு விஜயம் செய்தல் என்பவை மிகவும்  பிரதான  முக்கியமான விடயங்களாக உள்ளன.

9 மணிக்கு கட்டுநாயக்கவில்
நாளை காலை  9 .00 மணிக்கு  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும்   பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் திருத்தந்தை  இலங்கை ஜனநாயக சோஷலிஷ குடியரசின்   ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  உத்தியோகபூர்வமாக வரவேற்பார்.

ஜனாதிபதியுடன்      அரசாங்கத்தின்  பிரதமர்  ரணில் விக்மரசிங்க முக்கியஸ்தர்கள்      இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர்  மல்கம் ரஞ்சித்  மற்றும்   ஆயர்கள் உள்ளிட்ட பலரும்  இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

மரியாதை
அத்துடன் காலை  9.05 மணிக்கு   பாப்பரசருக்கு      இராணுவ மரியாதை   கட்டுநாயக்க விமான நிலையத்தில்  வைத்து அளிக்கப்படவுள்ளது.  அதன் பின்னர் பாப்பரசருக்கான   தேசிய கீதமும் இலங்கையின்   தேசிய கீதமும் இசைக்கப்படும்.

ஜனாதிபதி மற்றும்
பாப்பரசர் உரை
அதனையடுத்து இலங்கை ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின்  வரவேற்புரை இடம்பெறும்.   தொடர்ந்து பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் திருத்தந்தை    உரையாற்றுவார்.
மேலும்     இலங்கை கத்தோலிக்க திருச்சபையின்    ஆயர்களை  பேராயர்   கர்தினால்  மல்கம் ரஞ்சித் ஆண்டகை   பாப்பரசருக்கு  அறிமுகப்படுத்துவார்.    தொடர்ந்து ஜனாதிபதி    மைத்திரிபால சிறிசேன இலங்கையின் அரச முக்கியஸ்தர்களை    பாப்பரசருக்கு  அறிமுகப்படுத்துவார். பின்னர் விசேட  அதிதிகளுக்கான புத்தகத்தில்    பாப்பரசர் கையொப்பமிடுவார்.

ரத பவனியில்  கொழும்புக்கு
கட்டுநாயக்கவிலிருந்து  திறந்த ரத பவனியாக  நீர்கொழும்பு - கொழும்பு வீதியூடாக பாப்பரசர்  கொழும்புக்கு அழைத்துவரப்படுவார்.  இதன்போது  வீதியில் இருபுறங்களிலிந்தும்  மக்கள் அவரை தரிசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.   கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு வரையான வீதிகள்   சிறந்த  முறையில் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.   சுமார்  ஒன்றரை மணிநேரத்துக்குள்  பாப்பரசர்    கொழும்பை வந்தடைவார்.

ஆயர் இல்லத்தில்
கலந்துரையாடல்
பகல்   12.45 மணியளவில் அவர்  கொழும்பு பேராயர் இல்லத்தை பாப்பரசர் வந்தடைவார்.   அங்கு பாப்பரசர் ஆயர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவார்.

ஜனாதிபதியுடன் சந்திப்பு
அதன் பின்னர்   மாலை ஜனாதிபதியுடனான   மரியாதையின் நிமித்தமான சந்திப்பு     நடைபெற ஏற்பாடாகியுள்ளது.   அத்துடன்   ஜனாதிபதிக்கும்    பாப்பரசருக்கும் இடையிலான   தனிப்பட்ட சந்திப்பும்  இடம்பெறவுள்ளது.  அதன் பின்னர் ஜனாதிபதி  தனது குடும்பத்தினரை    பாப்பரசருக்கு  அறிமுகப்படுத்துவார்.   அதன் பின்னர் நினைவுப் பரிசில்களும்  பறிமாறப்படும்.

தபால் தலை வெளியீடு
ஜனாதிபதியுடனான  சந்திப்பின்போது   பாப்பரசரின் இலங்கை விஜயத்தை  முன்னிட்டு  விசேட தபால் தலை ஒன்றும் வெளியிடப்படும். இதற்கான ஏற்பாடுகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளன.    

மத தலைவர்களுடன் சந்திப்பு
அரச தலைவருடனான சந்திப்பையடுத்து    பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச  மாநாட்டு மண்டபத்துக்கு பாப்பரசர் விஜயம் செய்வார். அங்கு அவருடன்  பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும்   செல்வார்.   அந்த மண்டபத்தில்  நாட்டின் பௌத்தம்,  இஸ்லாம்,   இந்து மற்றும்  கிறிஸ்தவ மத தலைவர்களை சந்தித்து   கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வார்.

இந்த  கலந்துரையாடலில்  நாட்டின் அனைத்து மதங்களினதும்   முக்கியஸ்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று    ஆயர் மல்கம் ரஞ்சித் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.    அனைத்து  மதங்களினதும் பிரதிநிதிகள்    இந்த சந்திப்பில்  உரையாற்றவுள்ளனர்.

அந்த சந்திப்பையடுத்து  13 ஆம் திகதி நிகழ்வுகள் நிறைவு பெறவுள்ளன.  அதனையடுத்து பாப்பரசர்     வத்திக்கான் தூதரக இல்லத்தில்  இரவு தங்குவார்.

காலி முகத்திடலில் ஆராதனை
மறுநாள்   14 ஆம் திகதி   புதன்கிழமை இடம்பெறும் நிகழ்வுகளே மிகவும் முக்கியமானவையாகும்.   14  ஆம் திகதி  இடம்பெறவுள்ள மூன்று  முககிய விடயங்கள்  மிகவும் விசேடமானவையாகும்.  காலி முகத்திடலில் முதலில்      பாப்பரசரின்   விசேட திருப்பலி ஆராதனை நடைபெறும். பின்னர்   பின்னர்    ஜோசப் வாஸ் அடிகளார்     புனிதராக திருநிலைப்படுத்தப்படுவார்.

காலி முகத்திடலில் நாட்டு மக்களுக்காக பாப்பரசரின்  விசேட ஆராதனை நடைபெறும்.   காலிமுகத்திடலில் காலை  8.30 மணிக்கு    திருப்பலி ஆராதனையை  பாப்பரசர் நடத்துவார்.  அதன் பின்னர்  ஜோசப்வாஸ் அடிகளார் திருநிலைப்படுத்தப்படுவார்.    

13 மாலையிலிருந்து
மக்கள் வரலாம்
இதற்கான காலிமுத்திடலில்   ஏற்பாடுகள்  சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.   13  ஆம் திகதி மாலை  மாலையிலிருந்து மக்கள்  காலிமுகத்திடலுக்கு  மக்கள் வர  முடியும்.  14 ஆம் திகதி காலை  6 மணிவரை  மக்கள்  காலி முகத்திடலுக்கு  வரலாம்.       காலை ஆறு மணிக்குப் பின்னர்  வீதி  மூடப்படும்.       பக்தர்கள்  தமது  தனிப்பட்ட வாகனங்கள்  அல்லது  போக்குவரத்து சேவையில் வரலாம்.      வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான தரிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

முக்கியஸ்தர்கள் பங்கேற்பு
காலிமுகத்திடலில் இடம்பெறும்நிகழ்வில். பாதிரியார்கள் ஆயர்கள் உள்ளிட்ட  1200  முக்கியஸ்தர்கள் காலி முகத்திடல் ஆராதனையில் பங்கெடுப்பார்கள். அத்துடன் தூதரக அதிகாரிகள்  அமைச்சர்கள் உள்ளிட்ட 1500  பேர் பங்கேற்பார்கள்.  மேலும்  இந்தியாவின் கோவாவிலிருந்து பாதிரியார்கள் ஆயர்கள் உள்ளிட்ட  1500 க்கும்  மேற்பட்டோர்  பங்கேற்பார்கள்.   விசேட ஒரு இடத்தில் 500  நோயாளர்களை பாப்பரசர் ஆசீர்வதிப்பார்.


மடு விஜயம்
அதனையடுத்து  பிற்பகல் 2 மணிக்கு  பரிசுத்த பாப்பரசர்  விசேட ஹெலிகப்டர் மூலம்  மன்னார் மடு தேவாலயத்துக்கு  பயணிப்பார்.   அவருடன்    கர்தினால் மல்கம் ரஞ்சித்  ஆண்டகை மற்றும்   பாப்பரசருடன் இலங்கை வரும்  ஊடகவியலாளர்கள்  ஆகியோர்    மடுவுக்கு செல்லவுள்ளனர்.


விசேட ஆசியுரை
பிற்பகல் 3.30  மணியளவில் மன்னார் மடு தேவாலயத்தை  அவர் சென்றடைவார்.  மடுவில் ஹெலிகப்டர் தறையிறக்கப்படும்  இடத்திலிருந்து   பாப்பரசரை திறந்த ரத பவனியூடாக   மடு தேவாயலத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்.   மடு தேவாயலத்தில்  விசேட ஆசியுரை  நடைபெறும்.  மன்னார் மறை மாவட்ட ஆயர்  இராயப்பு ஜோசப்பு விசேட ஆசியுரை  வழங்குவார். சுமார் ஒரு மணிநேரம்  பாப்பரசர் மடு தேவாயலத்தில் தங்கியிருப்பார். அதன் பின்னர் ஹெலிகப்டர் ஊடாக   கொழும்பு கொழும்பு திரும்புவார்.


வியாக்கிழமை பிலிப்பீன் விஜயம்
அதன் பின்னர் மறுநாள் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி   பாப்பரசர் 8.00 மணியளவில் கொழும்பிலிருந்து   கட்டுநாயக்க விமானம் நிலையத்தை சென்றடைவார். அங்கிருந்து 9.00 மணியளவில்  பிலிப்பின் நாட்டுக்கு    பாப்பரசர்  பயணிப்பார்.


மருத்துவ ஏற்பாடுகள்
பாப்பரசரின் வருகையை முன்னிட்டு  சுகாதாரம் மற்றும்     மருத்துவ உதவி நிலைகள் குறித்து கவனமெடுக்கப்பட்டுள்ளது.  கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரும்வரை    பாப்பரசருடன்  ஒரு   அம்புயூலன்ஸ்  வண்டி   வரும்.   அதில் ஒரு டாக்டர்  தாதி மற்றும் சுகாதார ஊழியர் ஒருவர் ஆகியோர் இடம்பெறுவார்கள்.


15 அம்பியூலன்ஸ் வண்டிகள்
காலி முகத்திடலிலும்   15  அம்புயூலன்ஸ் வண்டிகள் தயார் நிலையில் இருககும்.       மக்களுக்கான முதலுதவி ஏற்பாடுகளும் செய்யப்படும்.  மேலும  நோயாளர்களை     கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். மடுவிலும்      வைத்திய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மடுவில் நான்கு  இலட்சம் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  மடு தேவாலய பகுதியில்  டெங்கு  நுளம்பு பரவாமல் இருக்கவும்தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

266 ஆவது பாப்பரசர்
பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் திருத்தந்தை    கத்தோலிக்க திருச்சபையின்   266 ஆவது  திருத்தந்தையாவார்.  லத்தின் அமெரிக்க நாடான     ஆர்ஜன்டீனாவை   சொந்த நாடாக கொண்ட    பாப்பரசர்   லத்தீன் அமெரிக்க நாடு ஒன்றிலிருந்து   இந்தபுனித பதவிக்கு வந்த முதலாவது  தந்தையாவார்.
கடந்த  2013 ஆம் ஆண்டு   கத்தோலிக்கத் திருச்சபையின்  266   ஆவது பாப்பரசராக  பதவியேற்ற திருத்தந்தை    பிரேசில்  மற்றும்  தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு  இதற்கு  முன்னர்  விஜயம் செய்துள்ளார்.

பாப்பரசரின் வருகையையொட்டி விசேட போக்குவரத்து ஏற்பாடு Reviewed by NEWMANNAR on January 13, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.