அண்மைய செய்திகள்

recent
-

மடு தேவாலயத்தில் பாப்பரசர்! பறந்தது சமாதானப்புறா-Photos&Video

புனித பாப்பரசர் அருட்தந்தை பிரான்சிஸின் உலங்கு வானூர்தி மூலம் வடக்கின் மடு தேவாலயத்திற்கு தற்போது வருகைதந்துள்ள நிலையில் விசேட ஆராதனைகள் ஆரம்பமாகியுள்ளது.
பாப்பரசரின் ஆசீர்வாத நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர், சி,வி,விக்னேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர்கள், யாழ். மாவட்டத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர், மற்றும் ஆறு லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களும் கூடியுள்ளனர். 

இதேவேளை மடு தேவாலயத்தை சூழ பொலிசார் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மடுவில் பறந்தது சமாதானப்புறா
இலங்கைக்கு வருகை தந்துள்ள புனித பாப்பரசர் நாட்டில் சாந்தியையும் சமாதானத்தையும் வேண்டி சமாதானப் புறா பறக்கவிட்டார். 
நேற்று இலங்கைக்கு வருகை தந்த பாப்பரசர் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டு மடு மாதா திருத்தலத்திற்கு வருகைதந்துள்ளார்.
 இந்த நிலையில் நாட்டில் சமாதானம் நிலவ வேண்டி சமாதானப் புறாவினை பறக்கவிட்டார்.
http://video.newmannar.com/2015/01/pope-in-sri-lanka-prayer-in-madhu.html

















மடு தேவாலயத்தில் பாப்பரசர்! பறந்தது சமாதானப்புறா-Photos&Video Reviewed by Admin on January 14, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.