அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரின் முன்னேற்றத்துக்கான சில அலோசனைகள்-Mr.Sinclair Peter



14.03.2015 தொடக்கம் மன்னார், தலைமன்னாருக்கான புகையிரசேவை 
ஆரம்பிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் மக்களும் அரச ஊழியர்களும்,அதன் பலனைப் பெறமுயற்சிகள்எடுத்ததாகத் தெரியவில்லை.

அ.சாந்திபுரத்தில் 12 ஆட்டோக்களும், ஸ்ரேசன் கிராமத்தில், 8 ஆட்டோக்களும் உள்ளன இவற்றைஉள்ளடக்கிய சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு முன்னுரிமை புகையிரதநிலையத்தில் வழங்கிஓட்டோதரிப்பிடம் நகரசபையால் உடனடியாக நிர்மானிக்கப்படல் வேண்டும்.

ஆ.CTB/தனியார் பஸ் தரிப்பிடம் புகையிரத நிலையத்தில் அமைத்து ஒவ்வொரு புகையிரதத்திற்கும் சேவை ஆரம்பிக்கப்படல்.

இ.சிற்றுண்டிச் சாலைகள், மன்னாரில் உற்பத்திசெய்யப்படும் பனம் பொருட்கள், கருவாடு,அரிசிமாஉணவுகள், தேன் ,விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்வதற்கு வசதிகள் ஏற்படுத்தல்.

ஈ.மன்னார் ஆயருக்கு உரியகாணி புகையிரதநிலையத்திற்கு அருகில் காணப்படுவதால் அதில் கடைத்தொகுதிகள் அமைந்துமக்களுக்கு வாடகைக்குவிடப்படல்.

உ) உல்லாசப் பயணிகளைக் கவரும் முகமாக சாந்திபுர நுழைவாயிலை, தெரு வோரங்களில் மரங்களை நட்டும், வீதிவளக்குகளை அமைத்தும் குப்பை கூழங்களை அகற்றியும், வீதியில் மீன்பிடிவலைகள் காயப்போடுவதை நிறுத்தியும், நுழைவாயிலை அழகுபடுத்தல்.

ஊ) உப்பு கூட்டுத்தாபனம்,ஏற்கனவே தமது பகுதியை விஸ்தரித்துள்ளது. சுனுயு கேட்கும் பட்சத்தில் பாதையின் அருகில் 20 அடி விட்டுத்தருவதாகக் கூறியுள்ளது. இதைப் பெற்று வீதியை அகலமாக்குவதுடன் 300 மீற்றருக்கு இடையில் மழைநீர் சாந்திபுரக் கிராமத்தில் இருந்து கடலுக்குச் செல்வதற்கு வாய்க்கால் குழாய்கள் அமைத்தல்.

02. மன்னார் விளையாட்டரங்கின் பழைய நீர்த்தாங்கி உடைக்கப்பட்டு வருகின்றது. இதன் சீமேந்துக்கற்களை அருகில் உள்ள மாதாகோவில் அத்திவாரத்திற்குப் போடுவதற்கு ஒப்பந்தகாரரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுவதுடன், ஆஸ்பத்திரிவீதி ,தலைமன்னார் வீதியை, அவ்விடத்தில்அகலப்படுத்துவதற்காகவும், விளையாட்டரங்கு சந்தியில் ஓர் சுற்றுவளைவு.ஏற்படுத்துவதற்கும்,Round About யிடம் கேட்கப்பட்டுள்ளது. இதை அமுலாக்கல்

அ) பழைய சவுக்காலையில் மரணித்தவர்களின் நினைவுத் தூபிகள் ஸ்ரேடியம் சந்தி மதிலில்பதிக்கப்பட்டுள்ளது. இதைக் கவனமாக அகற்றி வேறு இடத்தில் வைத்தல்.

ஆ) ஸ்ரேடியம்சந்தியில் இருந்து 200 மீற்றர் நீளத்திற்கு ஆஸ்பத்திரிவீதியிலும்,தலைமன்னார் வீதியிலும் இருவழிப்பாதை அமைத்தல்.

03. அண்மையில் மன்னார் நகரசபையினால் 150 ற்கு மேற்பட்ட வீதிப் பெயர்ப் பலகைகள் எஸ்லோன் கம்பனியின் அனுசரணையுடன் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 100 க்கு மேற்பட்ட பெயர்ப் பலகைகளில் தழிழ்,ஆங்கில எழுத்துக்கள் பிழையாகக் குறிக்கப்பட்டுள்ளதுடன். வீதிகளின்
பெயர்களும், பெரிதும் மாற்றப்பட்டுள்ளது (உ.ம்) ஆஸ்பத்திரிவீதி– ஆஸ்பத்திரிஒழுங்கைவீதி எனவும், சின்னக்கடை 6 குறுக்கு வீதிகள் - பெற்றா 6 குறுக்கு வீதிகள் எனவும், மாதாகோவிலுக்கு
அருகில் - முதலியார்குளம், (நெடுங்குளம்) தமிழில் முதலையார்குளம் எனவும், முஸ்லீம்
கிராமத்தில், மூர் வீதி, முஸலீம் வீதி, மூர் குறுக்கு வீதி,எனப் பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை
உடன் நகர சபை திருத்தி அமைத்தல்

04. மன்னார் பஸ்தரிப்பிடத்திலிருந்து தலைமன்னார் பிரதானவீதி,அகலமாக்கப்படல் வேண்டும்.

என கடந்த 5 வருடங்களாக கதைக்கப்பட்டு வருகின்றது. இதன் முதற் கட்டமாக கச்சேரிக்கு முன்பாகஉள்ள பழைய நூலகம், அரசஊழியர்கள் கிளப், RDA காரியாலயம், நகர சபை, வாராந்தசந்தை, RDAவிடுதி,போன்ற அரசகாணிகளில், போதிய இடப்பரப்புள்ளதினால், அவற்றை சகலரும் விடுவித்து இரு பக்க பாதைகள் மன்னார் சுற்றுவளைவில் இருந்து சின்னக்கடை 2ம் குறுக்குத் தெருவரை அமைத்தல், காணிகள் விடுவிக்கப்படும் பட்சத்தில் சுனுயு இப்பணிகளைச் செய்வதற்கு தயாராக உள்ளது.
05. மன்னார் வைத்தியசாலையில் நோயாளர்களின் கவனிப்பு சகல ஊழியர்களினாலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 வருடங்களாக வைத்தியசாலைஆலோசனைக் குழு நியமிக்கப்படவில்லை இவற்றை உடனடியாக நியமித்து மக்களுக்கு சேவையாற்றல்.

அ) வாராந்தம் நடைபெறும் 4 கிளினிக்குகளில், சுமார் 200 தொடக்கம் 300 நோயாளர்கள் நெடுந் தூரத்திலிருந்து வருகைதருகின்றனர். இவர்களைப் 4 – 5 மணித்தியாலங்கள் பராமரிப்பதற்கு 3 – 4வைத்தியர்கள் உள்ளனர், இப்பற்றாக்குறையை ஒழுங்குபடுத்தல்.

ஆ) பி.ப. 4.00 யிலிருந்து அடுத்த நாள் காலை 8.00 மணிவரை நோயாளர்கள் பராமரிக்கப்படுவதுவெகுகுறைவாககப் காணப்படுகின்றது. இவற்றை நிவர்த்திசெய்தல்.

06. அரச அதிபரின் முயற்சியினால் ருNழுPளு, ருஊ, டீசனைபiபெ டுயமெய போன்றன பல வருடங்களாகப் புறக்கணிக்கப்பட்டிருந்த 46 குளங்களை இனங்கண்டு அவற்றில் தற்போதுள்ள 26 குளங்களை அரச அதிபருக்கு பரிந்துரை செய்துள்ளனர், இவற்றை உடனடியாக புனர்நிர்மானம் செய்தல்.

அ) 15 குளங்களுக்கு மேல் 6 மாதத்திற்கு நீர் நிரம்பியுள்ளது இதில் நன்னீர் மீன் வளர்த்தல்,

ஓர் சில குளங்களை பொதுமக்கள் குளிப்பதற்காக பாவிக்கப்படல், 25 குளங்களில் கட்டாக்காலிஆடு,மாடு,கழுதைகள் நீர் குடிப்பதற்கான வசதி செய்தல், 3 குளங்களுக்கு மேல் ஆடைகள் துவைப்பதற்குஉரியவர்களிடம் வளங்கல், இதில் 12 குளங்களைச் சுற்றி நடைபாதை அமைத்து மின்விளக்குகள்பொருத்த மரங்கள் நாட்டி பறவைகள் சரணாலயம், போன்றன அமைத்து ஓய்வு நேரங்களைக்கழிப்பதற்கும்,நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு உதவியாக அமைத்துக் கொடுத்தல்.

ஆ) 26 குளங்களின் விபரங்கள் அரச அதிபரிடமும் பிரதேச செயலாளரிடமும், நகரசபையினரிடமும்,பிறிச்சிங் லங்காவிடமும் உள்ளது தேவையானவர்கள் தொடர்புகொள்ளவும்.

07. அண்மையில் யாழ் காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவரின் மாநாட்டுமண்டபம், அல்லது ஜனாதிபதி மாளிகை, பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன. இதைசுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கலாம் என தற்போதைய ஜனாதிபதியும், வடமாகாண முதலமைச்சரும்,
அறிவித்துள்ளனர். இருப்பினும், யாழ் பல்கலைக் கழகம், பல பிரிவுகளைத் தொடக்குவதற்கும்,மாணவர்களின் விடுதிக்கும் பெரிதும் கஸ்ரப்படுகின்றது. எனவேகல்வியை முக்கியமாகக் கருதி100 ஏக்கர் பரப்பளவுள்ள, 500 நபர்கள் தங்கக் கூடிய இம் மண்டபத்தை யாழ் பல்கலைக்கழகத்தற்கு ஒதுக்குவதன் மூலம் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, கிழக்குமாகாணம், போன்ற தூர இடத்துமாணவர்கள் உயர்கல்வி பெறுவதங்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

08. மன்னார் பிறிச்சிங் லங்காவினாலும், UC  மன்னார், மற்றும் 500 க்குமேற்பட்ட பொதுமக்களினாலும் 50 க்கு மேற்பட்ட அரசஊழியர்கிளாலும், மன்னார் நகர அபிவிரித்தித்திட்டம் ஒன்று வரையப்பட்டு அரச அதிபர், UDA கொழும்பு,போன்றவர்களுக்கு 2013ம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் பொருத்தமானதை அமுல்படுத்தகொழும்பு UDA விற்கு அழுத்தம் கொடுத்தல்.

Mr.Sinclair Peter
Liaison Officer Bridging Lanka



மன்னாரின் முன்னேற்றத்துக்கான சில அலோசனைகள்-Mr.Sinclair Peter Reviewed by NEWMANNAR on March 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.