அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை.-Photos



சிறு கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சின் ஏற்பட்டில் மன்னார் மாவட்டத்தில் சிறு கைத்தொழில் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் விசேட விழிர்ப்புனர்வு செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை(10) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

சிறு கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சுடன் கைத்தொழில் தொழில் நுற்ப நிறுவனம் மற்றும் கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆகியவை இணைந்து குறித்த விழிர்ப்புணர்வு செயலமர்வை ஏற்பாடு செய்திரந்தனர்.

குறித்த செயலமர்வின் போது 200 சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு 4 குழுக்களாக பிரிக்கப்பட்;டனர்.

இக்குழுக்களுக்கு கருவாடு உற்பத்தி,உணவு உற்பத்தி,ரசாயன பொருட்கள் உற்பத்தி,பழப்பயிர்ச்செய்கை மற்றும் வீட்டுத்தோட்டம் செய்கை ஆகிய நான்கு துறைகளுக்குள் உள்வாங்கப்பட்டு அவர்களின் சுய தொழில் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் சிறு கைத்;தொழில் வர்த்தக அமைச்சின் செயலாளர் கமகே,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய ஆகியோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.







மன்னாரில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை.-Photos Reviewed by NEWMANNAR on March 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.