வெளிநாட்டு சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன
வெளிநாட்டு சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன
தூதுவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு சேவை உத்தியோகத்தர்களுக்கு நாட்டில் 29 வெற்றிடங்கள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.
கடந்த அரசாங்கத்தினால் அரசியல் தலையீட்டினால் வழங்கப்பட்ட அரசியல் நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்டதால், இந்த வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
இந்த வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் காலதாமதமின்றி விரைவில் நியமிக்கப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.
வெளிநாட்டு சேவையில் கடந்தகாலங்களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் மட்ட பதவிகளுக்கு 36 பேர் அரசியல் சிபாரிசில் நியமிக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய நியமனங்கள் குறித்த பரிந்துரைகள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியின் அனுமதி கிடைத்தவுடன் அவற்றை பாராளுமன்ற செயற்குழுவிற்கு முன்வைக்கவுள்ளதாக அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.
பாராளுமன்ற செயற்குழுவின் அனுமதி கிடைத்ததும், இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் வெளிவிவகார பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வெளிநாட்டு சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன
Reviewed by NEWMANNAR
on
March 10, 2015
Rating:

No comments:
Post a Comment