மன்னார் நானாட்டானில் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளை கொண்ட குளியலறை மற்றும் மலசல கூட தொகுதி திறந்து வைப்பு.-Photos
இலங்கை அரசாங்கம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் நிதி உதவியுடன் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையினால் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் நவீன வசதிகளைக்கொண்ட குளியலறை  மற்றும் மலசல கூட தொகுதிகள் அமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக நானாட்டான் பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்ட நிலையில் குறித்த தொகுதி நேற்று(11) புதன் கிழமை பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் அன்புராஜ் லெம்பேட் அவர்களினால் வைபக ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 49 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த நவீன வசதிகளைக்கொண்ட குளியலரை மற்றும் மலசல கூட தொகுதி அமைக்கும் வேளைத்திட்டம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் கடந்த 23-05-2013 அன்று ஆரம்பிக்கப்பட்டு 22-11-2013 அன்று நிறைவடைந்தது.
மக்களின் பயண்பாட்டிற்காக நானாட்டான் பிரதேச சபையிடம் குறித்த மலசல கூட தொகுதி கையளிக்கப்பட்டு சுமார் ஒரு வருடங்களை கடந்த நிலையில் நேற்று புதன் கிழமை(11) குறித்த தொகுதி திறக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
-குறித்த நவீன வசதிகளைக்கொண்ட குளியலரை மற்றும் மலசல கூட தொகுதிகள் அமைக்கப்பட்டு நானாட்டான் பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டு ஒரு வருடங்களை கடக்கின்ற போதும் குறித்த தொகுதி மக்களின் பயண்பாட்டிற்கு திறந்து விடப்பாடாமை குறித்தும்,மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கடந்த 1-03-2015) ஊடகங்களில் செய்தி வெளியாகிய நிலையிலே குறித்த தொகுதி திறக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக விடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் நானாட்டானில் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளை கொண்ட குளியலறை  மற்றும் மலசல கூட தொகுதி திறந்து வைப்பு.-Photos
 Reviewed by NEWMANNAR
        on 
        
March 12, 2015
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
March 12, 2015
 
        Rating: 
       Reviewed by NEWMANNAR
        on 
        
March 12, 2015
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
March 12, 2015
 
        Rating: 





 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment