மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 5 பொலிஸ் அதிகாரிகள் மன்னார் மேல் நீதிமனறத்தில் இடம் பெற்ற இரு வழக்கு விசாரனைகளில் இருந்து விடுதலை.
மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 5 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக மன்னார் மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இரண்டு வழக்கு விசாரனைகளில் இருந்தும் குறித்த பொலிஸ் அதிகாரிகள் 5 பேரும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்து மன்னார் மேல் நீதிமன்றம் இன்று(31) செவ்வாய்க்கிழமை விடுதலை செய்துள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு தர்மலிங்கம் ரஜித் மற்றும் முஹமது அமானுள்ள ஆகிய இருவரையும் திருட்டுச் சம்பவம் ஒன்றின் போது மன்னார் பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் பரிசேதகர்களான திசாநாயக்க,ஜெயசூரிய,பொலிஸ் சாஜன் பெரேரா,பொலிஸ் சாஜன் கலியுக வரதன்,பொலிஸ் கொஸ்தபில் மூக்கையா குணசீலன் ஆகிய ஐவரும் இணைந்து கைது செய்து விசாரனைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த இரண்டு சந்தேக நபர்களின் வங்கி கணக்குகளில் இருந்தும் குறித்த பொலிஸார் பணத்தை திருடியதாக மன்னார் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த 5 பொலிஸாருக்கு எதிராக இடம் பெற்று வந்த வழக்கு விசாரனைகள் மன்னார் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இடம் பெற்று வந்த நிலையில் குறித்த வழக்கு விசாரனைகள் இன்று செவ்வாய்க்கிழமை (31-03-2015) மன்னார் மேல் நீதிமன்;றத்தில் மன்னார் மேல் நீதிமன்ற ஆணையாளர் மஹிந்த பினிதிய முன்னிலையில் இடம் பெற்றது.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் மேல் நீதிமன்ற ஆணையாளர் மஹிந்த பினிதிய குறித்த 5 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் இரண்டு வழக்கு விசாரனைகளில் இருந்தும் குற்றமற்றவர்; என தீர்ப்பளித்து விடுதலை செய்தார்.
எதிராகள் சார்பாக சட்டத்தரணிகளான திருச்செல்வம் திருவருள்,துசித் ஜோன்தாசன்,மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 5 பொலிஸ் அதிகாரிகள் மன்னார் மேல் நீதிமனறத்தில் இடம் பெற்ற இரு வழக்கு விசாரனைகளில் இருந்து விடுதலை.
Reviewed by NEWMANNAR
on
March 31, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 31, 2015
Rating:


No comments:
Post a Comment