த.தே.கூட்டமைப்பு அரசில் பங்கு பெறுமா? சுவிஸ் விமான நிலையத்தில் வைத்து விபரிக்கிறார் மாவை சேனாதிராஜா!
இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சரவையில் பங்குபெற வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். ஆனால் நாங்கள் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. மந்திரிப் பதவியை எதிர்பார்த்து இந்த ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தவில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் வாழ்வில் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். இனப்பிரச்சினைக்குத் தீர்வு, நிலப்பிரச்சினை, காணாமல்போனோர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் என்ற அடிப்படையிலே முதலில் பேச வேண்டுமென வற்புறுத்தியுள்ளோம்.
அந்த அடிப்படையிலேயே இதுவரையில் செயற்பட்டு வந்துள்ளோம் என சுவிஸ் விமான நிலையத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
த.தே.கூட்டமைப்பு அரசில் பங்கு பெறுமா? சுவிஸ் விமான நிலையத்தில் வைத்து விபரிக்கிறார் மாவை சேனாதிராஜா!
Reviewed by NEWMANNAR
on
April 19, 2015
Rating:

No comments:
Post a Comment