எதிர்கட்சியாக இருக்கும் தகுதி கூட்டமைப்பிற்கே: எம்.ஏ.சுமந்திரன்
எதிர்கட்சியாக இருப்பதற்கான தகுதி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே காணப்படுகின்றது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள வார இதழொன்றுக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இணையாத ஒரே கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே.
பாராளுமன்ற சம்பிரதாயங்களை மதித்து சரியான முறையில் சீர்தூக்கிப் பார்ப்பின், எதிர்க் கட்சித் தலைமைப் பதவி எமக்கே வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நான்கு கட்சிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் 14 பேர் உறுப்பினர்களாக உள்ளதுடன், ஜனநாயக தேசிய முன்னணிக்கு 7 ஆசனங்களே காணப்படுகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசாங்கத்தில் இணைந்துள்ளன.
இதன் அடிப்படையில் பார்க்கும் போதும் எதிர்க் கட்சித் தலைவராக வருவதற்குரிய தகைமை எம்மிடமே காணப்படுகின்றது என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சியாக இருக்கும் தகுதி கூட்டமைப்பிற்கே: எம்.ஏ.சுமந்திரன்
Reviewed by NEWMANNAR
on
April 19, 2015
Rating:

No comments:
Post a Comment