மன்னார் எழுத்தூர் செம்மண் வீதியில் மோட்டார் சைக்கிலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாப்பொதி மீட்பு.-Photos
மன்னார் எழுத்தூர் செம்மண் வீதி பகுதியில் உள்ள பற்றையினுள் மோட்டார் சைக்கிலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கிலோ கிராம் நிறை கொண்ட கஞ்சா பொதியினை நேற்று வியாழக்கிழமை இரவு மன்னார் பொலிஸார் மீட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எழுத்தூர் செம்மண் வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.45 மணியளவில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் மோட்டார் சைக்கிலில் வருகை தந்ததோடு அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிலை அவ்வீதியில் உள்ள பற்றைக்காட்டினுள் மறைத்து வைத்து விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
இந்த நிலையில் சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் அவசர பொலிஸ் பிரிவிற்கு உடனடியாக தகவல் வழங்கிய நிலையில் இரவு 9 மணியளவில் அவ்விடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிலை மீட்டு சோதனையிட்டு பார்த்துள்ளனர்.
இதன் போது குறித்த மோட்டார் சைக்கிலில் இருக்கைக்கு கீழ் சுமார் 5 கிலோ கொண்ட கஞ்சாப்பொதி காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கஞ்சப்பொதியினையும்,மோட்டார் சைக்கிலையும் மன்னார் பொலிஸார் மீட்டுச் சென்றுள்ளதாக அந்த மக்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்ட போது,,,
மன்னார் சௌத்பார் பகுதியைச் சேர்ந்த இருவரே குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்.ஆனால் மோட்டார் சைக்கில் மன்னார் மூர்வீதியைச் சேர்ந்த பிறிதொரு நபருடையது.
கோயிலுக்குச் செல்வதாக கூறி மோட்டார் சைக்கிலை வாங்கிக்கொண்டு கஞ்சாவை வைத்து கொண்டு சென்றுள்ளனர்.
இதன் போதே அப்பகுதியில் பொலிஸாரை கண்டு ஓடியுள்ளனர்.இந்த நிலையில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிலில் இருந்து கஞ்சா பொதி கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் எழுத்தூர் செம்மண் வீதியில் மோட்டார் சைக்கிலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாப்பொதி மீட்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
April 24, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 24, 2015
Rating:
.jpg)
.jpg)
.jpg)

No comments:
Post a Comment