அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காகவும் குரல் கொடுப்பவர் மன்னார் ஆயர்- காலி மறைமாவட்ட ஆயர் மேதகு றேமன் விக்கிறமசிங்க ஆண்டகை அவர்கள்.-Photos
காலி மறைமாவட்ட ஆயர் குருக்கள் உட்பட 18 பேர் மன்னார் மறைமாவட்டத்திற்கு இன்று (12.05.2015) விஜயம் ஒன்றை மேற்கொண்டு, கடந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தமது உறவுப்பால ரீதியிலான கலந்துரையாடலை மேற்கொண்டனர். இன்நிகழ்வானது கறிற்ராஸ்-வாழ்வுதய கேட்போர் கூடத்தில் இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது. இன்நிகழ்வானது கறிற்ராஸ்-வாழ்வுதய இயக்குனர் அருட்பணி ம.ஜெயபாலன் அடிகளார் தலைமையில் இடம் பெற்றது.
இதில் மேற்படி காலி மறைமாவட்ட ஆயர் தனது ஆசியுரையில் தெரிவித்ததாவது எமது நாட்டில் மதங்களுக்கிடையில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் அதிகரிக்க வேண்டும். குறிப்பாக இனவேறுபாடுகளைக் கழைந்து ஒற்றுமையுடனும், சமாதானமாகவும் நாம் வாழுவதற்கு அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டும். இவ்வாறான முயற்சிகளை நாம் அனைவரும் ஒருமித்து முன்னெடுப்போம். இம்முயற்சிகளில் அதி தீவிரமாக செயற்படுபவர் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆவார் இவர் இன மத வேறுபாடின்றி செயற்படுபவர் அவரது உடல் நலத்திற்காகவும் நாம் செபிப்போம்.
இன்று இக்கலந்துரையாடலில் தமது கருத்துக்களை முன்வைத்து தமது இழப்பினையும், துயரினையும் எடுத்து கூறிய மக்களுக்கு, தனது செபத்தில் மன்றாடுவதோடு குறிப்பாக வடகிழக்கு வாழ் மக்களின் காணாமல்போனோர் தொடர்பான பிரச்சனைகளை எம்மால் இயன்ற அளவு வெளி உலகிற்கும் தமது மறைமாவட்ட மக்களுக்கும் தெரியப்படுத்துவதோடு அவர்களுக்காக மறைமாவட்ட ரீதியில் செபிப்போம் எனவும் கூறினார். இக்கலந்துரையாடலில் காலி மறைமாவட்டத்திலிருந்து வருகைதந்த அருட்பணி டேமியன் அடிகளாரும் தனது கருத்துரையினை ஆற்றினார்.
அத்தோடு மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அடிகளார் அவர்கள் மன்னார் மறைமாவட்டத்தின் தற்போதய சூழ்நிலைகள் தொடர்பாகவும், தமது கருத்துக்களை முன்வைத்தார். இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குருக்கள் மற்றும் போரினால் தமது அவயவங்களை இழந்த மக்களும் தமது பிள்ளைகள், கணவன்மாரை இழந்த பெண்களும், கறிற்ராஸ்-வாழ்வுதய பணியாளர்களும் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்டவர்களில் அனேகமானோர் கடந்தகால போரில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆவார்கள.; இவர்கள் காணாமல் போனவர்களுக்காக தாம் எடுத்த முயற்சிகளால்; எவ்வித பயனும் கிட்டவில்லை எனக்கூறியதோடு தமது இழப்பின் அனுபவத்தை கண்ணீர்மல்க தெரியப்படுத்தினர். இறுதியில் இக்கலந்துரையாடல் பி.பகல் 12.15 மணியளவில் முடிவுற்றது.

Reviewed by NEWMANNAR
on
May 13, 2015
Rating:
No comments:
Post a Comment