மன்னார் திருக்கேதீஸ்வரத்திற்கு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் விஜயம்.நிகழ்விலும் கலந்து கொண்டார்.-Photos
மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு இன்று சனிக்கிழமை(30) காலை விஜயத்தை மேற்கொண்ட புனர்வாழ்வு,புனரமைப்பு இந்து கலாச்சார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பூசை வழிபாட்டில் ஈடுபட்டதோடு ஆலயத்தின் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டார்.
இன்று காலை 9 மணியளவில் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு வருகை தந்த அமைச்சர் முதலில் பூசை வழிபாட்டில் ஈடுபட்டார்.
அதனைத்தொடர்ந்து ஆலயத்தை சுற்றிப்பார்த்த அமைச்சர் குறித்த ஆலயத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த விக்கிரகங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆலய நிர்வாக சபையினரிடம் கோரிக்கை விடுத்தார்.
அதனைத்தொடர்ந்து இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் திருக்கேதீஸ்வரம் சிறி சபாரத்தின சுவாமிகள் தொண்டர் சபை ஏற்பாடு செய்த ஆன்மீகப் பெருவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் கலந்து கொண்டார்.
இதன் போது சிறப்பு சொற்பொழிவாளர்களின் சொற்பாழிவுகள் இடம் பெற்றதோடு நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மன்னார் திருக்கேதீஸ்வரத்திற்கு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் விஜயம்.நிகழ்விலும் கலந்து கொண்டார்.-Photos
Reviewed by NEWMANNAR
on
May 30, 2015
Rating:
No comments:
Post a Comment