அண்மைய செய்திகள்

recent
-

ஈராக்­கிய தலை­ந­க­ரி­லுள்ள ஹோட்­டல்­க­ளுக்கு வெளியில் இரட்டைக் குண்டுத் தாக்­கு­தல்கள்


ஈராக்கில் மத்­திய பாக்­தாத்­தி­லுள்ள ஹோட்­டல்­க­ளுக்கு வெளியில் வியா­ழக்­கி­ழமை நள்­ளி­ர­வுக்கு முன்னர் இடம்­பெற்ற இரட்டைக் கார் குண்டுத் தாக்­கு­தல்களில் குறைந்­தது 10 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 30 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­ துள்­ளனர். முத­லா­வது குண்டு வெடிப்பு பபிலோன் ஹோட்­ட­லுக்கு வெளி­யிலும் இரண்­டா­வது குண்டு வெடிப்பு இஷ்தார் ஹோட்­ட­லுக்கு வெளி­யிலும் இடம்­பெற்­றுள்­ளன. பாக்தாத் நகரில் சுமார் 12 வருட கால­மாக நடை­மு­றை­யி­லி­ருந்த இரவு நேர ஊர­டங்குச் சட்டம் கடந்த பெப்­ர­வரி மாதம் நீக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. அதே­ச­மயம் பபிலோன் ஹோட்­டலின் கார் தரிப்­பி­டத்தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட மூன்­றா­வது கார்க் குண்­டொன்றை செய­லி­ழக்க வைக்கும் நட­வ­டிக்­கையில் பொலிஸார் ஈடு­பட்­டுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. அண்­மையில் புதுப்­பிக்­கப்­பட்ட அந்த இரு ஹோட்­டல்­களும் வியா­ழக்­கி­ழமை இரவு­களில் சுறு­சு­றுப்­பாக செயற்படுவது வழ­மை­யாகும். 2010 ஆம் ஆண்டில் மேற்­படி ஹோட் டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்களில் 30 பேருக் கும் அதிகமானோர் பலியாகியிருந்தனர்.
ஈராக்­கிய தலை­ந­க­ரி­லுள்ள ஹோட்­டல்­க­ளுக்கு வெளியில் இரட்டைக் குண்டுத் தாக்­கு­தல்கள் Reviewed by Author on May 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.