அண்மைய செய்திகள்

recent
-

மீண்டும் இயங்கும் உலகின் மிகப் பெரிய பௌதிக ஆராய்ச்­சிக் ­கூடம்


நவீன உலகின் மிகப் பெரி­யதும் சக்தி வாய்ந்­த­து­மான பௌதிக ஆராய்ச்சிக் கூட­மான சுவிட்­சர்­லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்­துள்ள CERN ஆராய்ச்சிக் கூடம் 2 வருட கால இடை­வெ­ளிக்குப் பின் மறு­படி இயங்கத் தொடங்­கி­யுள்­ளது. LHC என அழைக்கப் படும் இந்தத் துகள் முடுக்கி (particle accelerator) தான் நவீன உலகின் மிகப் பெரிய எந்­திரம் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. ஏற்­க­னவே மார்ச் மாதம் இயக்கத் திட் ­ட­மிடப்பட்­டி­ருந்த இதன் பணி சில சிக்கல்­களால் தள்ளிப் போடப் பட்டு சில தினங் களுக்கு முன் மறு­படி இயக்கப் பட்­டுள்ளது. அணு­சக்தி ஆராய்­சிக்­கான ஐரோப்­பிய நிறு­வ­னத்தின் (CERN) விஞ்­ஞா­னிகள் தமது இறுதிப் பரி­சோ­த­னை­களை நிறைவு செய்த பின்னர் LHC இன் 27 Km நீள­மான வளை­யத்­துக்குள் முத­லா­வது அணுக் கற்­றை­களைச் செலுத்தித் தமது ஆய்வைத் தொடங்­கினர். இன்­றைய பௌதிக உல­குக்கு துணை அணுத் துகள்கள் குறித்த அவ­சி­ய­மான சான்­று­களை (evidence) சேக­ரிக்கும் பௌதி­க­வி­ய­லாளர் சமூ­கத்தின் முக்­கிய தேவையைப் பூர்த்தி செய்­வதே எமது எதிர்­பார்ப்பு என CERN ஆய்வு கூட இயக்­குநர் ரோல்ஃப் ஹேயர் அதன் உத்­தி­யோ­க­பூர்வ இணையத் தளத்தில் தெரி­வித்­துள்ளார். LHC எந்­தி­ர­மா­னது ஒரு செக்­க­னுக்கு 600 மில்­லியன் துகள்­களை சுமார் 10 மணி நேரங்­க­ளுக்கு தொடர்ச்­சி­யாக சுழலும் கற்றை மூலம் உரு­வாக்­கு­கின்­றது. இந்தத் துகள்கள் ஒளியின் வேகத்­துக்கு அண்­மையில் பூமியில் இருந்து நெப்­டி­யூ­னுக்குச் சென்று மீளத் திரும்ப எடுக்கும் மொத்தத் தூரத்தின் அதா­வது 10 பில்­லியன் Km களுக்கும் அதி­க­மாகப் பய­ணிக்க உந்தப் படு­கின்­றன. அதா­வது LHC இற்குள் ஒர் புரோட்டோன் ஆனது ஒளியின் வேகத்­துக்கு அண்­மையில் ஒரு செக்­க­னுக்கு 11 245 சுற்­றுக்­களை மேற்­கொள்­கின்­றது. சுமார் ஆயிரக் கணக்­கான விஞ்­ஞா­னி­களும், பொறி­யி­ய­லா­ளர்­களும் தொழி­நுட்­ப­வி­ய­லா­ளர்­களும் இணைந்து ஜெனீவா ஏரிக்கும் ஜூரா மலைத் தொட­ருக்கும் இடையே அமைந்­துள்ள இந்த ஆய்வு கூடத்தில் இந்த மிக நீண்ட ஆராய்ச்­சியை மேற்­கொள்­வ­தற்­கான காரணம் இவ்­வாறு விளக்கப்படு­கின்­றது: அதா­வது இன்று பெரும்­பா­லான அறி­வி­ய­லா­ளர்­களால் ஏற்றுக் கொள்ளப்பட்­டுள்ள பிர­பஞ்­சத்தின் தோற்­றத்­துக்குக் கார­ண­மான பெரு வெடிப்பின் (Big Bang) சில கணங்­க­ளுக்குப் பின் சக்­தியின் அடர்த்தி மற்றும் வெப்­ப­நிலை உட்­பட துகள் அடிப்­ப­டையில் நில­விய நிபந்­த­னை­களை மீள செயற்கை முறையில் உரு­வாக்கி பிர­பஞ்சம் எவ்­வாறு பரி­ணாமம் அடைந்­தது என்­பதை அறிந்து கொள்­வதே CERN இல் மேற் கொள்ளப் படும் பரி­சோ­த­னை­களின் பிர­தான நோக்­க­மாகக் கூறப்­ப­டு­கின்­றது. இதற்கு முக்­கிய இன்­னொரு காரணம் இன்­றைய துகள் இயற்­பி­யலில் (particle physics) இன் தர­மான மாதிரி (Standard model) அடிப்­ப­டை­யி­லான எமது அறிவு பூர­ண­மற்­ற­தாக இருப்­பதும் ஆகும் என LHC இன் ஆப்­ப­ரேஷன் குழுத் தலைவர் டாக்டர் மைக் லாமொண்ட் கூறு­கின்றார். பிர­பஞ்­ச­வி­யலில் (Cosmology) இல் மிகவும் புதி­ரா­க­வுள்ள கரும் பொருள் (Dark matter) மற்றும் கரும்­சக்தி (Dark energy) ஆகி­யவை தொடர்­பிலும் ஈர்ப்பு விசை போன்ற அடிப்­படை விசைகள் தொடர்­பிலும், நிறை (mass) உடைய மற்றும் நிறை அற்ற துணை அணுத் துணிக்­கைகள் தொடர்­பிலும் மேல­திக விளக்­கங்­களைப் பெறு­வ­தற்கும் CERN பரி­சோ­த­னைகள் உத வும் என எதிர்­பார்க்கப்படு­கின்­றது. CERN இல் அமைந்­துள்ள LHC ஆய்வு எந்­திரம் மட்­டுமே ஏறக்­கு­றைய 3 பில்­லியன் யூரோக்கள் செலவில் நிர்­மா­ணிக்கப் பட்­டது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்­நி­லையில் புதிய துகள் (proton) மோதல் ஆய்­வுகள் ஜுன் முதற் கொண்டு நிகழ்த்தப் படலாம் எனவும் ஆனாலும் இதன் மூலம் 2016 மத்தியிலேயே புதிய கொள்கைகள் வெளிச்சத்துக்கு வரலாம் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது. 2012 இறுதியில் LHC இல் கற்றை சக்தி அளவை 6.5 TeV இற்கு உயர்த்துவதற்காக இது தற்காலிகமாக மூடப் பட்டிருந்ததை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இயங்கும் உலகின் மிகப் பெரிய பௌதிக ஆராய்ச்­சிக் ­கூடம் Reviewed by Author on May 13, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.