திருக்கேதீஸ்வரம்- மன்னார் பிரதான வீதியில் விபத்து-ஒருவர் காயம்.-Photos
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் சந்தியில் இன்று(13) புதன் கிழமை காலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் காயமநை;து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து மன்னாரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை ஏற்றி வந்த கூலர் ரக வாகனமே விபத்திற்குள்ளாகியுள்ளது.
திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன் போது குறித்த வாகனத்தின் சாரதி காயமடைந்த நிலையில் உடனடியாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருக்கேதீஸ்வரம்- மன்னார் பிரதான வீதியில் விபத்து-ஒருவர் காயம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
May 13, 2015
Rating:
.jpg)
No comments:
Post a Comment