அணித் தலைவராக தொடர்ந்தும் அஞ்சலோ மெத்தியூஸ்; இருபதுக்கு 20 போட்டிகளுக்கு மலிங்க!
இலங்கைக் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் அணித் தலைவராக சகல துறை ஆட்டக்காரரான அஞ்சலோ மெத்தியூஸ் தொட ர்ந்து செயற்படுவார் என்று இலங்கைக் கிரிக்கெட்டின் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. அதேபோல் இலங்கை இருபதுக்கு 20 அணியின் தலைவராக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள பாகிஸ் தான் தொடரிலிருந்து அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இங்கிலாந்து தொடர்வரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்தியூஸ் செயற்படுவார். அதே போல் 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் வரை லசித் மலிங்க இருபதுக்கு 20 அணிக்கு தலைமை தாங்குவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் இறுதியாக நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை லசித் மலிங்க தலைமையிலான அணி வெற்றிகொண்ட பெருமையோடு 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்திலும் லசித் மலிங்க தலைமையிலான அணி களமிறங்கவுள்ளது.
அணித் தலைவராக தொடர்ந்தும் அஞ்சலோ மெத்தியூஸ்; இருபதுக்கு 20 போட்டிகளுக்கு மலிங்க!
Reviewed by Author
on
May 15, 2015
Rating:
Reviewed by Author
on
May 15, 2015
Rating:
.jpg)

No comments:
Post a Comment