தலதாமாளிகைக்கு முன்பாதை பாவனைக்கு திறந்துவிடக்கூடாது -அஸ்கிரிய பீடாதிபதி
கண்டி ஸ்ரீ தலதாமாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள பாதையை பொதுமக்களின் போக்கு வரத்திற்காக திறந்து விட மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இடமளிக்ககூடாது என கண்டி அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்க தேரர் சலகம ஸ்ரீ அத்த தஸ்ஸி தெரிவித்தார்.
சனிக்கிழமை மாலை மகாநாயக்கரிடம் ஆசி பெறுவதற்காக வந்திருந்த மகாவலி மற்றும் சுற்றாடல் பாதுகாப்புத்துறை அமைச்சர் வசந்த அலுவிகாரவிடமே மகாநாயக்க தேரர் இதனை தெரிவித்தார்.
1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி காலை ஸ்ரீ தலதாமளிகை மீது இடம்பெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலையடுத்து இப்பாதை மூடப்பட்டது.
உலக பௌத்த மக்களின் உயரிய புனித தலமாக மதிக்கப்படும் இந்த ஸ்ரீ தலதாமளிகையில்தான் புத்த பகவானின் புனித தந்தமும் வைக்கப்பட்டுள்ளது.
இப்பாதை திறக்கப்படுமானால் தலதாமளிகையின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுவதுடன் தலதாமாளிகைக்கு வருகின்ற பக்கதர்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்படலாம்.
இப்பாதை திறக்கப்படுவதற்கு முன்னர் காலம் சென்ற மகாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்திர கித்தவும் திறக்க இடமளிக்க கூடாது என்பதை வலியுறுத்தி வந்தார்.
இப்பாதை விவகாரத்தில் நானும் அவரது கருத்தையே கொண்டிக்கின்றேன். எனவே இம் முயற்சிகளுக்கு இடமளிக்க கூடாது என கேட்டுக்கொண்டார்.
தலதாமாளிகைக்கு முன்பாதை பாவனைக்கு திறந்துவிடக்கூடாது -அஸ்கிரிய பீடாதிபதி
Reviewed by Author
on
May 17, 2015
Rating:
Reviewed by Author
on
May 17, 2015
Rating:

No comments:
Post a Comment