அண்மைய செய்திகள்

recent
-

மஹிந்த ஆட்சிக்காலத்தில் மத்திய வங்கியில் 2700பில்.மோசடி விசாரணை நடத்தப்பட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மத்திய வங்கியில் 2700 பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளது. ஆனால் அர்ஜுன் மஹேந்திரனின் 10 பில்லியன் ரூபா விடயத்தினை மட்டும் பேசுகின்றனர். ராஜபக்ஷவின் காலத்தில் இடம்பெற்ற இந்த பாரிய மோசடியை எதிர்க்கட்சியினர் மூடி, மறைக்க பார்க்கின்றனர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐ.தே.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் எந்தவித கேள்வி பத்திரங்களும் கோரப்படாமல் மத்திய வங்கியின் 2 ஆயிரத்து 700 பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் பதில் ஆளுநர் சமரசிங்க இதுபற்றிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அத்துடன், தனியார் வத்தகர் குழுவொன்றும் இதனை ஆராய்ந்து வருகின்றது. 2012, 2013, 2014 ஆகிய காலப்பகுதிகளிலேயே இந்த நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் விடயம் தொடர்பாக ஆராய்ந்து விரைவில் பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதுடன் நாட்டு மக்களுக்கும் இதனை தெரியப்படுத்துவேன். மஹிந்த ஆட்சிக்காலத்திலிருந்த ஜீ.எல். பீரிஸ், வாசுதேவ நாணயக்கார போன்ற எதிர்க்கட்சியினர் இதனை மூடி மறைப்பதற்காக அர்ஜுன் மகேந்திரன் விடயத்தில் பாராளுமன்றத்தில் அக்கறை காட்டுகின்றனர். மஹிந்த ராஜபக்ஷவை காப்பாற்ற முயல்கின்றனர். இந்த பணம் இருந்திருந்தால், நாட்டிலுள்ள ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியிருக்கலாம். சம்பள அதிகரிப்புகளை வழங்கியிருக்கலாம். ஐந்து வருடத்தில் பதவி வகித்துவிட்டு அதிகாரிகளாகவும் இருந்து பல கோடி ரூபாக்களை சம்பாதித்து தற்போது அனுபவிக்கின்றனர். இதற்காகவே அர்ஜுன் மகேந்திரன் விடயத்திலும் விசாரணைக் குழுவொன்றை அமைத் தோம். சிலர் நீதிமன்றம் சென்றனர். மத்திய வங்கி ஆளுநர் பற்றிய அறிக் கையையும் பாராளுமன்றத்தில் சமர்ப் பித்தோம். மத்திய வங்கியில் கடந்த மூன்று வருட காலத்தில் 2700 பில்லியன் ரூபா மோசடி செய்தமை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு பகிரங்கப்படுத்தப்படுமென்றும் பிரதமர் தெரிவித்தார்.
மஹிந்த ஆட்சிக்காலத்தில் மத்திய வங்கியில் 2700பில்.மோசடி விசாரணை நடத்தப்பட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும் Reviewed by Author on May 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.