அண்மைய செய்திகள்

recent
-

சாதகமற்றகாலங்களில் சாதகமாகிய பெரியவெங்காயச் செய்கை-Photos

சாதகமற்றகாலங்களில் பெரிய வெங்காயச் செய்கை மன்னாரில் வெற்றியழித்து சாதகமாகியுள்ளது இதனை அடுத்து தாய்க்குமிழ்களை வழங்கும் வைபவம் விவசாயத்திணைக்கள பணிப்பாளர்நாயகம் பங்குபற்றுதலுடன் மன்னார் தரவன் கோட்டை கிராமத்தில் கடந்த (15) வெள்ளிக்கிழமை; நடைபெற்றது.

இந் நிகழ்வில் விவசாயிகள் சம்பிரதாயபூர்வமாக தாய்க்குமிழ் உற்பத்திக்காக பெரியவெங்காய குமிழ்களை விவசாயதிணைக்கள பணிப்பாளர்நாயகத்திடம் கையளித்தனர் இந் நிகழ்வில் விவசாயிகளுக்கான காசோலைகளும் வழங்கப்பட்டது.

USAID நிறுவனத்தின் குழுத்தலைவர் திரு. டேவிட் டையர் மற்றும் உயரதிகாரிகளும்,விவசாயத்திணைக்களத்தின் உயரதிகாரிகளும் பங்குபற்றியிருந்தனர்

நாட்டின் பலபாகங்களிலும் பெய்த கடும் மழையினால் பெரிய வெங்காயச் செய்கை பெரிதும் பாதிப்படைந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் வெற்றிகரமாகபயிர்செய்து விவசாயிகள் அறுவடை மேற் கொண்டுள்ளனர். இவ் அறுவடை செய்த தம்புள்ள தெரிவு எனும் இனமானது தாய்க்குமிழ் உற்பத்திக்காக விவசாயத்திணைக்களம் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்துவருகின்றது என மன்னார் மாவட்ட பிரதிமாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.பொ.அற்புதச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் ருளுயுஐனு நிறுவனத்தின் ளுழடனை திட்டத்தின் அனுசரணையின் கீழ் விவசாயத்திணைக்களத்தின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் சாதகமற்ற காலங்களில் பெரிய வெங்காயச் செய்கையினை ஊக்குவிக்கும் நோக்கோடு சிலாவத்துறை,தேக்கம்,உயிலங்குளம் தவிர்ந்த அனைத்து விவசாயப் போதனாசிரியர்பிரிவுகளிலுமிருந்து 323 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.

ஒருபயனாளிக்கு¼ஏக்கர் நிலப்பரப்பிற்கானவிதைகள் மற்றும் நாற்றுமேடையினைபாதுகாப்பதற்கான பொலித்தீன் போன்றவை கடந்த 23.11.2014 இல் விநியோகிக்கப்பட்டன.

நாற்று மேடை தயாரித்தல்,பராமரிப்பு மற்றும் நாற்று நடுகை போன்ற பயிரியல் நடவடிக்கைகளும் பயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குமாக பயனாளிகளுக்கு 20 இற்கும் மேற்பட்டகளப்பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன.

விவசாயப்போதனாசிரியர்கள்,பிரதிமாகாணவிவசாயப் பணிப்பாளர் தொடர்கள விஜயங்களைமேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது










சாதகமற்றகாலங்களில் சாதகமாகிய பெரியவெங்காயச் செய்கை-Photos Reviewed by NEWMANNAR on May 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.