கலர்ஸ் மொபைல் அறிமுகம் செய்துள்ள Zoom Series 3G ஃபோன்கள்
அழைப்புகளை மேற்கொள்ள மட்டுமே கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்திய காலம் தற்போது கடந்தோடிவிட்டது.
இன்று மொபைல் சாதனங்கள், பயன்படுத்தும் நபரின் ஆளுமையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், தொடர்பாடல்களின் எல்லைகளுக்கு அப்பால் செல்வதற்கு உதவும் வகையில் இவற்றின் தொழில்நுட்ப வளர்ச்சி மேலோங்கியுள்ளது.
மேலும், எமது வாழ்வில் இடம்பெறும் விடயங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களின் ஊடாக உலகுக்கே அறியப்படுத்தும் வகையில் காலம் விருத்தியடைந்துள்ளதுடன், நவீன கால வாழ்க்கையின் எத்தருணமும் ஒன்லைனாகவே காணப்படுகின்றது.
இந்த நவீன கால சமூகத்தின் தேவையை புரிந்து கொண்டு, கலர்ஸ் மொபைல் தனது புதிய 3G ஸ்மார்ட்ஃபோன் வகைகளை Zoom Series எனும் பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
Zoom Series இன் X28 மற்றும் X30 என்பன இலங்கை சந்தைக்கு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், மே மாத பிற்பகுதியில் X25 அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக X35 மற்றும் X56 போன்றன ஜுன் மாதத்தில் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளன.
இந்த கையடக்க தொலைபேசி வகைகள் இலங்கையின் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு புதுவிதமான கையடக்க தொலைபேசி அனுபவத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
இலங்கையில் கையடக்க தொலைபேசிகளை மக்கள் உற்றுநோக்கும் விதத்தை இவை முற்றாக மாற்றியமைக்கும் வகையில் அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Zoom Series வகையைச் சேர்ந்த சகல கையடக்க தொலைபேசிகளும் நவீன அன்ட்ரொயிட் தொழில்நுட்பத்தை கொண்டவையாகும். பின்புற கமரா உயர் மெகா பிக்செல் கொள்ளளவை கொண்டுள்ளதுடன், இது வாழ்வின் முக்கியமான தருணங்களை பதிவு செய்து வைத்திருக்கும் தன்மை கொண்டவையாகும்.
அவ்வாறான முக்கிய தருணங்களை ஒரு சிறிய அழுத்தலின் மூலம் நேரடியாக facebook போன்ற சமூக வளைதலங்களின் ஊடாக உலகுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது அத்துடன், இந்த பரந்த தெரிவுகளுக்கு மேலாக, ஒவ்வொரு ஸ்மார்ட்ஃபோன் ஆர்வலரும் தமக்குப் பொருத்தமான வகையை இலகுவாக தெரிவுசெய்து கொள்ள முடியும். மேலும் Zoom series தொலைபேசிகள் கவர்ச்சிகரமான விலைகளில் அமைந்துள்ளன.
பாவனையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அதிசிறந்ததொரு மொபைல் அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளன. கலர்ஸ் மொபைல் ஃபோன்களுடன், பாவனையாளர்கள் தற்போது மேம்படுத்தப்பட்ட மொபைல் தொலைபேசி தொழில்நுட்பத்தை பெற்றுக் கொள்ள முடிவதுடன், இலங்கையின் முன்னணி இலத்திரனியல் மற்றும் மின்னுபகரண உற்பத்தியாளரான ஒரேன்ஜ் இலெக்ட்ரிக் இடமிருந்து பரிபூரண உத்தரவாதத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.
கலர்ஸ் மொபைல் ஃபோன்களை தற்போது நாடு பூராவுமுள்ள ஒரேன்ஜ் இலெக்ட்ரிக் விநியோகத்தர்களின் ஊடாக இலகுவாக கொள்வனவு செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கலர்ஸ் மொபைல் அறிமுகம் செய்துள்ள Zoom Series 3G ஃபோன்கள்
Reviewed by Author
on
May 13, 2015
Rating:

No comments:
Post a Comment