சுதந்திர கட்சியின் உரிமை அனைவருக்கும் மேலாக எனக்கே காணப்படுகின்றது :சந்திரிக்கா
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உரிமை அனைவருக்கும் மேலாக எனக்கே காணப்படுகின்றது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா - யக்கல வாராந்த சந்தையை நேற்று முன்தினம் திறந்து வைத்து உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியின் ஒரு பிரிவையே வாக்காளர்கள் நிராகரித்ததாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முன்பதாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவி வகித்தார். எனினும் 2005 ஆம் ஆண்டின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் தலைவரானார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சுதந்திர கட்சியின் உரிமை அனைவருக்கும் மேலாக எனக்கே காணப்படுகின்றது :சந்திரிக்கா
Reviewed by Author
on
May 26, 2015
Rating:
Reviewed by Author
on
May 26, 2015
Rating:

No comments:
Post a Comment