50 பசுக்கள், 100 ஆடுகள் சீதனத்துடன் ஒபாமாவின் மகளை திருமணம் செய்துகொள்ள கென்யா இளைஞர் விருப்பம்
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு மாலியா, சாஷா என்னும் இரு மகள்கள் உள்ளனர். இவர்களில், தற்போது 16 வயதுடைய மாலியாவை  50 பசுக்கள், 100 ஆடுகள் சீதனத்துடன் திருமணம் செய்துகொள்ள தயாராக உள்ளதாக கென்யாவைச் சேர்ந்த  இளைஞர் தெரிவித்துள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவின் கெரிச்சோ கவுண்ட்டி பகுதியைச் சேர்ந்த சட்டத்தரனியான பீலிக்ஸ் கிப்ரோனோ மடாகெய், ஒபாமாவின் மகளை திருமணம் செய்துகொள்வதில் மிகவும் தீவிரமாக உள்ளார். 
 ஒபாமா தனது 2008ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்னரே, அவருடைய மகள் 10 வயது சிறுமியாக இருந்த மாலியா மீது ஒருவகை ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதாக இவர் தெரிவித்துள்ளார்.
கென்யா நாட்டு மரபுகளின்படி, மணமகளுக்கு திருமண சீதனமாக 50 பசுமாடுகள், 70 செம்மறியாடுகள், 30 வெள்ளாடுகளை வழங்கப் போவதாக தெரிவித்துள்ள இவர், இதற்கு முன்னர் எந்தப் பெண்ணுடனும் நான் பழகியது கிடையாது எனவும் மாலியாவுக்கு நான் உண்மையானவனாக நடந்து கொள்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜுன் மாதம் கென்யாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவரும் ஒபாமாவை நேரில் சந்தித்து பெண் கேட்கப் போவதாக உறுதிபட தெரிவிக்கும் கிப்ரோனோ, ’எனது ஆசையை என் குடும்பத்தாரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த ஆடு, மாடுகளை எல்லாம் எனது திருமணத்துக்காக தந்துவிடவும் அவர்கள் சம்மதித்துள்ளனர் என்றார்.
தற்போது 90 வயதாகும் ஒபாமாவின் பாட்டி, மேற்கு கென்யாவில் உள்ள கோகெலோ நகரில் வசித்து வருகிறார். 
இந்நிலையில், அரசுமுறைப் பயணமாக வரும் ஜூலை மாதம் கென்யாவுக்கு வரும் ஒபாமாவுக்கு பூங்கொத்து அளித்து, உற்சாக வரவேற்பு கொடுத்தால் மட்டும் போதாது. அவருக்கு கென்யா நாட்டு குடியுரிமையும் வழங்கப்பட வேண்டும் என்றும் இவர் வலியுறுத்தியுள்ளார்.
திருமணத்துக்கு பின்னர் என் மனைவி வீட்டு வேலைகளை செய்துகொண்டும், ஆடு, மாடுகளை பராமரித்து, பால் கறந்து அவற்றை நல்லபடியாக கவனித்து கொண்டால் போதும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
50 பசுக்கள், 100 ஆடுகள் சீதனத்துடன் ஒபாமாவின் மகளை திருமணம் செய்துகொள்ள கென்யா இளைஞர் விருப்பம்
 
        Reviewed by Author
        on 
        
May 27, 2015
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
May 27, 2015
 
        Rating: 

No comments:
Post a Comment