மன்னார் முருங்கன் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் மண் கொண்டு சென்ற 5 டிப்பர் வாகன சாரதிகள் கைது.-Photos
முருங்கன் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் இன்று வியாழக்கிழமை(11) காலை சட்டவிரோதமான முறையில் மணல் மண் கொண்டுசெல்லப்பட்ட 05 டிப்பர் வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு அதன் சாரதிகள் 5 பேரையும் கைது செய்துள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன அலகக்கோன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.அபேயரத்தின தலைமையிலான பொலிஸ் குழுவினர் மணல் மண் கொண்டு செல்லப்பட்ட டிப்பர் வாகனங்களை கைப்பற்றியுள்ளனர்.
அரிப்பு மற்றும் சிலாபத்துறை பகுதிகளில் குறிந்து குறித்த மணல் மண் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவற்றில் ஒரு டிப்பர் நானாட்டான் பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளதோடு ஏனைய 4 டிப்பர் வாகனங்களும் முருங்கன் பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.
மணல் மண்னுடன் குறித்த 5 டிப்பர் வாகனங்களும் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு அதன் சாரதிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டு முருங்கன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஐவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டவுடன் அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் முருங்கன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் முருங்கன் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் மண் கொண்டு சென்ற 5 டிப்பர் வாகன சாரதிகள் கைது.-Photos
Reviewed by NEWMANNAR
on
June 11, 2015
Rating:
No comments:
Post a Comment