அவதானம் : பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் போதை கலந்த குடிபானம் விற்பனை

பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து புதிய வகையான போதை கலந்த குடிபானம் விற்கப்படுவதாக நுகர்வோர் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
'Cola Spray', 'Spirit Spray' என்றழைக்கப்படும் குறித்த குடிபான வகையை அருந்தியவுடன் பாடசாலை மாணவர்கள் போதையடைவதாகவும் தெரியவருகின்றது.
இதையடுத்து பாடசாலைகளை அண்டிய பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து குடிபான வகையொன்று விற்கப்படுகின்றதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நுகர்வோர் அதிகார சபையின் சோதனைப் பிரிவுகளும் அதிரடி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை பணித்துள்ளது.
அண்மையில் கம்பஹா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பாடசாலைகளை அண்டிய 9 கடைகளில் குறித்த குடிபான வகை விற்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
பெற்றோர், ஆசிரியர், அதிபர் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மன்னார், கம்பஹா, பொலநறுவை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் குறித்த போதைப்பொருள் குடிபான வகை விற்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அவதானம் : பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் போதை கலந்த குடிபானம் விற்பனை
Reviewed by Author
on
June 18, 2015
Rating:

No comments:
Post a Comment