இத்தேர்தல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை காணவும் நல்ல மாற்றத்தை தரும்-செல்வம் அடைக்கலநாதன்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் இரு தினங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒன்றுகூடவுள்ளதாகவும்,குறித்த ஒன்றுகூடலில் வேட்பாளர்கள் தெரிவு செய்வது தொடர்பிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
வேற்பாளர்கள் தெரிவின் போது, பொது முடிவின் அடிப்படையில் எல்லா மாவட்டத்திலும் பெண் ஒருவரை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர்கலாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கியுள்ளது.
அதே போல் மலையகம் சார்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் மேலோங்கியுள்ளது.அவற்றை பொதுவான கோரிக்கைகளாக நாங்கள் பார்க்கின்றோம்.
குறித்த விடையங்கள் தொடர்பில் இன்னும் இரு தினங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒன்று கூடவுள்ள நிலையில் அதற்கான வழிவகைகளை நாம் கையால்வோம்.
இடம் பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் ஒரு மாற்றத்தின் பின் வந்திருக்கின்றது.
மாற்றத்தின் ஊடாக வருகின்ற இத்தேர்தலிலே தமிழ் தேசியக்கூட்டமைப்பு அதிகலவான ஆசனங்களை கைப்பற்றுகின்ற போது இந்த அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கின்ற சந்தர்ப்பத்தை உருவாக்க முடியும்.
வருகின்ற புதிய அரசு தமிழ் தேசியக்கூட்டமைப்பை வைத்தே ஆட்சியமைக்கின்ற வாய்ப்புக்கள் ஏற்படலாம்.
அந்த சந்தர்ப்பத்தை பயண்படுத்தி எமது இனப்பிரச்சினைக்கான தீர்வு,காணமல் போனவர்கள் ,சிறையில் உள்ள இளைஞர்கள் ஆகியோரின் விடுதலை,எமது நிலத்தையும்,எமது மண்ணையும் அபகரித்துள்ள இராணுவத்தை வெளியேற்றுதல்,எமது கடலை எமது மக்கள் கையால்கின்ற சந்தர்ப்பங்கள்,மற்றும் எமது மக்கள் சொந்தக்காணிகளில் சுதந்திரமாக நடமாடுகின்ற,அமர வைக்கின்ற திட்டங்களை எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கின்ற போது ஒரு அழுத்தத்தை கொடுக்கின்ற வகையில் அதனை பெற்றுக்கொள்ளுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிக்கொள்ள முடியும்.
எனவே இத்தேர்தலில் மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும்.
இத்தேர்தல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை காணவும் நல்ல மாற்றத்தை தரும் என கருதுகின்றோம்.என மேலும் தெரிவித்தார்.
இத்தேர்தல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை காணவும் நல்ல மாற்றத்தை தரும்-செல்வம் அடைக்கலநாதன்.
Reviewed by NEWMANNAR
on
June 30, 2015
Rating:

No comments:
Post a Comment