அண்மைய செய்திகள்

recent
-

ஆஸியில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளரைக் காணவில்லை


அவுஸ்ரேலியாவுக்கு கடந்த 2010 ம் ஆண்டு படகு மூலம் வந்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் காணாமல்போயுள்ளார் .
கடந்த சனிக்கிழமை 3 மணியில் இருந்து இவர் காணாமல் போய் உள்ளதாக தமிழ் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

26 வயதுடைய நிரஞ்சன் கணேசமூர்த்தி என்ற இந்த புகலிடம் கோரிக்கையாளர் சிட்னியில் உள்ள ஓபன் என்னும் விலாசத்தில் வசித்து வந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக குடிவரவு திணைக்களத்துடனும் பேசியதாகவும் இவர் தொடர்பான தகவல் ஏதும் தங்களுக்கு தெரியாது என குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளதாக தமிழ் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இவர் பற்றி ஏதாவது தகவல் தெரிந்தாலோ அல்லது கதைத்து இருந்தாலோ தயவு கூர்ந்து அறிவிக்குமாறு தமிழ் தகவல் மையத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆஸியில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளரைக் காணவில்லை Reviewed by NEWMANNAR on June 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.