அண்மைய செய்திகள்

recent
-

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை கட்டுப்படுத்த வருகிறது சட்டம்


போக்குவரத்து விதிமுறைகளை மீறிப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2015 ஆண்டு மே மாதம் வரையில் மட்டும் 29 இலட்சம் மோட்டார் சைக்கிள்கள் நாட்டில் பாவனையில் உள்ளன. இவற்றில் 53 சதவீதமானவை தினமும் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றன. இதனால், மோட்டார் சைக்கிள்களினால் ஏற்படும் விபத்துக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2014.01.01 திகதி முதல் 2014.04.30ஆம் திகதி வரை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்;ந்து பயணித்தவர்கள் 254பேர் உயிரிழந்துள்ளனர். 

2015.01.01 திகதியில் இருந்து 2015.04.30 திகதி வரை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 332ஆக அதிகரித்துள்ளது. மோட்டார் சைக்கிள் விபத்து ஏற்படுவதற்கான 4 காரணங்கள் 

• பாதுகாப்பு தலைக்கவசங்களின் தாடைப் பட்டியினை பொறுத்தாதிருத்தல்
 • பாதுகாப்பு தலைக்கவசங்களை அணியாமை.
 • முன்னால் இலகுவாக பயணிக்கக்கூடியதாக இருந்த போதிலும் ஏனைய வாகனங்களை முந்திக்கொண்டு பயணிக்க முயற்சிக்கின்றமை. 
• கட்டுப்படுத்த முடியாதளவு வேகத்தில் பயணிக்கின்றமை

 இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 2015.06.10ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் கீழே கூறப்பட்ட சட்டங்களை பின்பற்றாவிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. 

• பாதுகாப்பு தலைக்கவசங்களின் தாடைப் பட்டியினைப் பொறுத்தாமல் ஓட்டுதல்.
 • பலவர்ணம் கொண்ட தலைக்கவச வைசரை உபயோகித்தல்.
 • ஏனைய வாகனங்களை முந்திக்கொண்டு பயணிக்க முயற்சித்தல் ஆகிய குற்றங்களை மேற்கொள்ளும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை கட்டுப்படுத்த வருகிறது சட்டம் Reviewed by NEWMANNAR on June 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.