தமிழ்மக்களின் கலை பண்பாட்டம்சங்கள் அழித்தொழிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகிறது : பா.அரியநேந்திரன்

வடக்கு கிழக்கில் 2009 ஆண்டு விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டதற்குப் பின்னர் திட்டமிட்ட முறையில் தமிழ்மக்களின் கலை பண்பாட்டம்சங்களை அழித்தொழிக்கும் செயற்பாடுகளும் ஒழுக்க சீர்கேடுகளுமே இடம்பெற்று வருகிறது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.
கோயில் போரதீவு இளைஞர் எழுச்சி மன்றத்தினால் கல்வியில் சாதனைபடைத்தோரை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு கோயில் போரதீவு கண்ணகியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
ஒரு இனத்தின் கலை பண்பாடுகள் அந்த அந்த இனத்தினாலேயே முன்னெடுக்கப்படவேண்டும் அப்போதுதான் அந்தக்கலைகள் பேணப்படும் இல்லாவிடின் அது அழிவடைந்து போய்விடும் அந்தவகையில் தமிழர்களின் பாரம்பரியங்களை கட்டிக்காக்கவேண்டியது இன்றைய இளைஞர்களின் பொறுப்பாகும்.
ஒரு நாட்டின் தலைவிதி என்பது அந்நாட்டில் வாழுகின்ற இளைஞர்களின் கைகளிலே தங்கியுள்ளது கடந்தகால போராட்ட வரலாறுகளில் எமது பாரம்பரிய கலை பண்பாடுகள் இந்த நாட்டை ஆட்சிசெய்த பேரினவாத அரசாங்கத்தினால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. ஆனால் இன்று போர் மௌனித்ததன் பிற்பாடும் வடகிழக்கு இளைஞர்கள் போதைவஸ்து பாவனைக்கும் மதுபாவனைக்கும் ஊக்குவிக்கும் சதி திரை மறைவில் மேற்கொள்ளப்படுகிறது .
இவ்வாறான செயற்பாடு வடகிழக்கு தமிழ் இளைஞர்களின் கலை பண்பாடுகள் சீரழித்து தமிழ்தேசிய உணர்வை மழுங்கடித்து எம்மைக் கொண்டு எம்மை அழிக்கும் செயலாகவே இதனைப் பார்க்கமுடியும்.
இதனால் தமிழ்மக்கள் மிகவும் அவதானமாக பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இளைஞர்களும் விழிப்பாக செயற்படவேண்டும் அப்போதுதா இவ்வாறான சீர்கேடுகளில் இருந்து எம்மைப் பாதுகாக்கமுடியும்.
ஆண்மைக்காலமாக வெளியாகிம் செய்திகளைப் பார்க்கின்றபோது பாடசாலை டிமற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தற்கொலை புரியும் நிகழ்வுகளும் தமிழ் மாணவிகளை தமிழர்களை கற்பழித்து கொலைசெய்யும் சம்பவங்களும் போர் மௌனித்ததன் பிற்பாடு இன்று இடம்பெறுகிறது ஆனால் விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் இடம்பெற்ற காலத்தில் வடகிழக்குத் தமிழ்மக்கள் மற்றும் இளைஞர்களின் ஒழுக்கம் சீரழியவில்லை.போருக்குப் பின்னரே வடகிழக்குப்பகுதியில் திட்டமிட்ட சீர்கேடுகள் இடம்பெறுகிறது இந்த சதிவலையில் நாம் சிக்விடக்கூடாது எனத் தெரிவித்தார்.
தமிழ்மக்களின் கலை பண்பாட்டம்சங்கள் அழித்தொழிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகிறது : பா.அரியநேந்திரன்
Reviewed by Author
on
June 13, 2015
Rating:

No comments:
Post a Comment