மகனை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த தந்தையை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த கைதிகள்..!
தனது மகன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மூலம் கொலை செய்து சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நபர், சிறைக் கைதிகளால் கடுமையான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பிரேசில் நாட்டில் இடம்பெற்றுள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜீடோ பயிற்றுவிப்பாளரான டேரியல் டிக்சன் மெனன்ஸ் சேவியர் என்பவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த நபர் தனது 12 மாத மகனை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்தாக தானாக வந்து பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இதை தொடர்ந்து சேவியர் விசாரணைக்காக 30 நாட்கள் சிறைகாவலில் அந்நாட்டில் உள்ள தகுவடிங்கா சிறைச்சாலையில் வைக்கப்பட்டார்.
சேவியர் செய்த குற்றம் குறித்து சிறைச்சாலையில் இருந்த ஏனைய கைதிகளுக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து சிறைக்கைதிகள் சிலர், சட்டம் அவருக்கு தண்டனை வழங்குகிறதோ இல்லையோ நாம் அனைவரும் சேவியருக்கு பாடம் கற்று கொடுக்க வேண்டுமென தீர்மானித்து, 20 கைதிகள் கொண்ட கும்பல் ஒன்று சேவியரை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளது.
இச் செயலால் அவரது பலத்த உபாதைக்குள்ளானார். இதை தொடர்ந்து சேவியர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவருக்கு பாரிய சிகிச்சை வழங்கப்பட்டது.
இந்நிலையில் சேவியர் சிகிச்சைக்கு பின் மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பிய போது மீண்டும் அதே கும்பல் அவரை மீண்டும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளது.
இச் செயலால் சேவியர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிப்பதோடு அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகனை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த தந்தையை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த கைதிகள்..!
Reviewed by Author
on
June 09, 2015
Rating:

No comments:
Post a Comment