ஆண்குறி தானம் பெற்ற நபருக்கு குழந்தை பிறக்கப்போகிறது: மருத்துவ உலகில் சாதனை

தென் ஆப்ரிக்காவில் ஆண்குறி தானம் பெற்ற நபருக்கு விரைவில் குழந்தை பிறக்கவிருக்கிறது.
தென்ஆப்பிரிக்காவில் வாழும் சில பிரிவை சேர்ந்த மக்களிடையே தங்கள் வீட்டில் பிறக்கும் ஆண் வாரிசுகளின் ஆண்குறியின் நுனித்தோலை அகற்றுவது வழக்கமாக உள்ளது.
அவ்வாறு நடைபெறும் முறையற்ற சிகிச்சையால் பல இளைஞர்கள் தங்கள் ஆண்குறியையே இழக்க நேரிடுகிறது.
இதன் காரணமாக அந்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 250 பேர் தங்கள் ஆண்குறியை இழந்து விடுவதாக கூறப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு 18 வயதில் நுனித்தோல் அகற்றும் முயற்சி நடைபெற்றபோது அவரது ஆண்குறி துண்டிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில், அந்த இளைஞருக்கு வேறொரு இளைஞர் தானமாக கொடுத்த ஆண்குறியை பொருத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி கேப்டவுன் அருகேயுள்ள பெலிவில்லேவில் டைகர்பெர்க் மருத்துவமனையில் ஸ்டெல்லன்போஷ் பல்கலைக்கழக சிறுநீரக பிரிவு தலைவரான பேராசிரியர் ஆண்ட்ரே வான் டெர் மெர்வே தலைமையில், தென் ஆப்பிரிக்க மருத்துவர்கள் மிகவும் சிக்கலான 9 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் மாற்று ஆண்குறியை இணைத்து சாதனை படைத்தனர்.
உலகின் முதல் ஆண்குறி மாற்று அறுவைச் சிகிச்சை என்ற வகையில் மருத்துவத்துறையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இந்த அறுவைசிகிச்சை கருதப்பட்ட நிலையில், அதைவிட பெரிதான அடுத்தகட்ட திருப்புமுனையும் தற்போது நிகழ்ந்துள்ளது.
தற்போது, 21 வயது வாலிபராக இருக்கும் அந்நபரின் காதலி 4 மாத கர்ப்பமாக உள்ளதாக அவருக்கு இந்த அறுசைசிகிச்சை செய்து வைத்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ஆண்குறி தானம் பெற்ற நபருக்கு குழந்தை பிறக்கப்போகிறது: மருத்துவ உலகில் சாதனை
Reviewed by Author
on
June 12, 2015
Rating:
Reviewed by Author
on
June 12, 2015
Rating:

No comments:
Post a Comment