அண்மைய செய்திகள்

recent
-

பிரதமர் வேட்பாளராக மகிந்த இல்லை இதுவே மைத்திரியின் முடிவு!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமமந்திரி வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவோ நியமிக்கவோ ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்ற பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டே பிரதமர் நியமிக்கப்படுவார் என்று ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக மஹிந்த ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கீழ் வரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வேட்பாளராக நியமிக்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமால் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் ஜனாதிபதியின் இந்த செய்தியை கண்டியில் இருந்த மஹிந்த ராஜபக்சவுக்கு எடுத்துச்சென்றனர்.

இந்த நிலையில் பிரச்சினை தொடர்பில் இணக்கத்துக்கு வர மஹிந்த ராஜபக்சவும் இணங்கியுள்ளதாக ஊடகம் ஒன்று இன்று மாலை செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளனர் என புதிய தகவலொன்று தெரிவிக்கின்றது.

பிரதமர் வேட்பாளராக மகிந்த இல்லை இதுவே மைத்திரியின் முடிவு! Reviewed by Author on June 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.