மட்டக்களப்பு சிறையிலிருந்து கைதி தப்பியோடிய சம்பவம் தொடர்பில் 4 அதிகாரிகள் பணிநீக்கம்
மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கடந்த சனிக்கிழமை (27) கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் 4 சிறைச்சாலை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் உயர் அதிகாரியை மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பொலன்னறுவை சிறைச்சாலைக்கு மாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் கோரியுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிறையிலிருந்து கைதி தப்பியோடிய சம்பவம் தொடர்பில் 4 அதிகாரிகள் பணிநீக்கம்
Reviewed by NEWMANNAR
on
June 30, 2015
Rating:

No comments:
Post a Comment