எவ்.ஏ.கிண்ண முன்னோடி கால் இறுதிகளில் முதல் தடவையாக யாழ்., மன்னார் அணிகள்

கார்கில்ஸ் ஃபுட் சிட்டி எவ். ஏ. கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் முன்னோடி கால் இறுதிகளில் விளையாடுவதற்கு யாழ்ப்பாணம் சிங்கிங் ஃபிஷ் கழகமும் மன்னார் புனித சூசையப்பர் கழகமும் தகுதிபெற்றுள்ளன.
எவ். ஏ. கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் இந்த மாவட்டங்களிலிருந்து இரண்டு கழகங்கள் முன்னோடி கால் இறுதிக்கு முன்னேறியிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
ப்றீமியர் லீக் முதலாம் பிரிவு போட்டிகளில் விளையாடிவரும் நியூ ஸ்டார் கழகத்தை சிங்கிங் ஃபிஷ் கழகமும் பலம்வாய்ந்ததும் கடந்த வருடம் கால் இறுதிவரை முன்னேறிய இலங்கை போக்குவரத்துச் சபை விளையாட்டுக் கழகத்தை பிரபல்யம் குன்றிய மன்னார் புனித சூசையப்பர் கழகமும் வெற்றிகொண்டன.
களனி மைதானத்தில் நடைபெற்ற ஏழாம் சுற்றில் நியூ ஸ்டார் கழகத்தை 4 க்கு 2 என்ற பெனல்டி அடிப்படையில் சிங்கிங் பிஷ் வெற்றிகொண்டது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டி முழு ஆட்டநேர முடிவின்போது 2 க்கு 2 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்திருந்தது.
நியூ ஸ்டார் சார்பாக எம். அனாஸ் (44 நி.), எம். எஸ். எம். ரியாஸ் ஆகியோரும் சிங்கிங் ஃபிஷ் சார்பாக ஜே. ரொக்சன் (56 நி.),பி. ரீ. கெட்ல்கி (88 நி.) ஆகியோரும் கோல்களைப் போட்டனர். மற்றொரு ஏழாம் சுற்று ஆட்டத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை அணியை அதன் சொந்த மைதானமான ஷாலிக்கா மைதானத்தில் 3 க்கு 2 என்ற கோல்கள் கணக்கில் மன்னார் புனித சூசையப்பர் கழகம் வெற்றிகொண்டது.
புனித சூசையப்பர் சார்பாக எவ். க்யூ. ரெக்சன் (17 நி.,31 நி.) இரண்டு கோல்களையும் எம். கே. ஆர். குறூஸ் (67 நி.) ஒரு கோலையும் போட்டனர். இலங்கை போக்குவரத்துச் சபை சார்பாக எல். டினார (39 நி.)இ எல். ஏ. கிரேரோ (46 நி.) ஆகியோர் கோல்களைப் போட்டனர்.
வார இறுதியில் நடைபெற்ற மற்றைய போட்டி முடிவுகள் வருமாறு,
கலம்போ எவ். சி. 1 - கெட்டேரியன்ஸ் 0, டொன் பொஸ்கோ 7 - பொலன்னறுவை நந்திமித்ர 0, ஹைலண்டர்ஸ் 4 - களுத்துறை பார்க் 2, புளூ ஸ்டார் 2 - பெலிக்கன்ஸ் 1, பொலிஸ் 4 - மொரகஸ்முல்லை 0, மாத்தறை சிட்டி 4 - திஹாரிய யூத் 1, சொலிட் 4 - மாவனெல்லை யுனைட்டட் 2 (பெனல்டி முறை).
எவ்.ஏ.கிண்ண முன்னோடி கால் இறுதிகளில் முதல் தடவையாக யாழ்., மன்னார் அணிகள்
Reviewed by Author
on
June 13, 2015
Rating:
Reviewed by Author
on
June 13, 2015
Rating:

No comments:
Post a Comment