நோயாளிகளுக்கு வழங்கப்படும் விலைப்பட்டியலில் மாற்றம்: நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை
நோயாளிகளுக்கு விபரமாக குறிப்பிடப்பட்ட விலைப்பட்டியல் வழங்கப்பட வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
தனியார் வைத்தியசாலைகள் மற்றும் தனியார் சிகிச்சை நிலையங்களுக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக தனியார் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நோயாளிகளுக்கு முழு விபரங்களும் அடங்கிய விலைப்பட்டியல் வழங்கப்பட உள்ளது.
இந்த நடைமுறை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அமுல்படுத்தப்பட உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
இவ்வாறு விபரங்களை வழங்காத வைத்தியசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.ஏ. டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
வழங்கப்பட்ட மருந்துப் பொருட்கள், பரிசோதனை விபரங்கள், கட்டணங்கள் உள்ளிட்ட சகல விபரங்களும் உள்ளடக்கி விலைப்பட்டியல் வழங்கப்பட உள்ளது.
நோயாளிகளுக்கு வழங்கப்படும் விலைப்பட்டியலில் மாற்றம்: நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை
Reviewed by NEWMANNAR
on
June 14, 2015
Rating:

No comments:
Post a Comment