அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானிய திருடர்களுக்கு "செக்" வைத்த பொலிசார்


குற்றம் நடக்கும் முன்பே அக்குற்றத்தை கண்டுபிடிக்கும் மென்பொருள் ஒன்றை பிரித்தானிய பொலிசார் உருவாக்கியுள்ளனர்.
வின்யாட் என்ற நியூசிலாந்து தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து பித்தானிய பொலிசார் பெர்சன் ஆப் இண்ட்ரெஸ்ட்(Person of Interest) என்ற மென்பொருளை உருவாக்கியுள்ளனர்.

இந்த மென்பொருளில் திருடர்களின் விவரங்கள், மின்னஞ்சல்கள், அவர்களின் முந்தைய திருட்டுகள், திருடர்களின் கூட்டாளிகள் என அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படும்.

பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை கண்காணித்து வரும் பொலிசார், திருடர்களின் செயல்களில் சிறு மாற்றம் தெரிந்தால் கூட, அவர்களின் அடுத்த திட்டம் என்ன என்பதை சுலபமாக கண்டுபிடித்துவிடலாம்.

இந்த மென்பொருள் மூலம், ஏற்கனவே திருட்டு தொழிலில் ஈடுபட்டு வரும் திருடர்களை கண்காணித்து திருட்டு நடக்கும் முன்பே தடுக்க முடியும், மேலும் பிரித்தானியாவில் குழந்தைகள் திருட்டு போன்றவற்றை தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

பிரித்தானிய திருடர்களுக்கு "செக்" வைத்த பொலிசார் Reviewed by Author on June 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.