சொத்து விபரம் வெளியிடாத வேட்பாளர்களுக்கு வேட்பாளர்கள் அட்டை வழங்கப்படமாட்டாது -தேர்தல் திணைக்களம்
பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜூலை மாதம 30ஆம் திகதிக்குள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்களை வெளியிட வேண்டும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அவ்வாறு வெளியிடாத வேட்பாளர்களுக்கு வேட்பாளர்கள் அட்டை வழங்கப்படமாட்டாது என்று தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் ஆர். எம்.ஏ. எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான இடங்களில் வேட்பாளர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்களை வெளியிட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சொத்து விபரம் வெளியிடாத வேட்பாளர்களுக்கு வேட்பாளர்கள் அட்டை வழங்கப்படமாட்டாது -தேர்தல் திணைக்களம்
Reviewed by NEWMANNAR
on
July 22, 2015
Rating:

No comments:
Post a Comment