ஆஷஸ் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று...

மைக்கேல் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து 169 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 2ஆவது டெஸ்டில் அவுஸ்திரேலியா 405 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணி கள் மோதும் 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் பர்மிங்காமில் உள்ள எட்ஜ் பஸ்டன் மைதானத்தில் இன்று தொடங்குகின்றது.
2ஆவது டெஸ்டில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு இங்கிலாந்து பதிலடி கொடுக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டிக்காக இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ் சேர்க்கப்பட்டுள்ளார். கேரி பேலனஸ் நீக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அணி இந்த டெஸ்டிலும் வென்று முன்னிலை பெற போராடும். ஸ்மித்இ ரோஜர்ஸ் ஆகியோர் துடுப்பாட்டத்திலும்இ ஜோன்சன்இ ஹாசல்வுட் ஆகியோர் பந்து வீச்சிலும் சிறந்த நிலையில் உள்ளனர்.
ஆஷஸ் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று...
Reviewed by Author
on
July 29, 2015
Rating:
Reviewed by Author
on
July 29, 2015
Rating:

No comments:
Post a Comment