கதிர்காமம் செல்லும் தமிழ் யாத்ரீகர்களுக்கு கிழக்கில் இடையூறு!
கதிர்காம வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக பாத யாத்திரையாக செல்லும் வடக்கு தமிழ் பக்தர்களுக்கு, கிழக்கில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காட்டுவழியில் பாத யாத்திரையாக கதிர்காமம் செல்லும் பக்தர்களே இவ்வாறு இடையூறுகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாத யாத்திரையாக மட்டக்களப்பை கடந்து அம்பாறை எல்லைப் பகுதியில் உள்ள முஸ்லிம் கிராமங்களை கடந்து செல்லும் போது, இடையூறுகளும் தாக்குதல்களும் இடம்பெறுகின்றன.
அம்பாறை பாலமுனை பிரதேசத்தில் அதிகளவில் இவ்வாறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன.
சில சந்தர்ப்பங்களில் பாத யாத்திரையாக செல்வோர் மீது கல் வீசப்படுகின்றது.
குழுக்களாக வந்து பாதையை இடைமறித்து இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்களும் இடம்பெறுவதாக தமிழ் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வடக்கு தமிழ் மக்கள் கடினமான பாதையை கடந்து கதிர்காமத்திற்கு யாத்திரை செல்வது மிக நீண்ட காலமாக இடம்பெற்று வரும் ஓர் நிகழ்வாகும்.
இடையூறுகள் இன்றி வழிபாடுகளை செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தருமாறு பக்த அடியார்கள் கோரியுள்ளதாக சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கதிர்காமம் செல்லும் தமிழ் யாத்ரீகர்களுக்கு கிழக்கில் இடையூறு!
Reviewed by NEWMANNAR
on
July 03, 2015
Rating:

No comments:
Post a Comment