அரசாங்கத்திலிருந்து பதவி விலகும் 15 சுதந்திர கட்சி உறுப்பினர்கள்?
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை அமைச்சுப் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்யுமாறு, கட்சியின் தேர்தல் செயற்பாட்டின் முக்கியஸ்தர் அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வெற்றிக்காக இணைய வேண்டாம் எனவும் கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமீபத்தில் ஆற்றப்பட்ட உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்யுமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்.
கட்சியை காட்டிக்கொடுத்த தலைவரின் கீழ் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டு வர கூடாதென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளை ஒன்றியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கமைய மீதமாக உள்ள 20 பேர்களில் 15 பேர் மாத்திரம் தேர்தல் நடவடிக்கைகளின் இடையில் இராஜினாமா செய்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 07 உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் வகையில் தங்கள் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துக்கொண்டனர்.
அரசாங்கத்திலிருந்து பதவி விலகும் 15 சுதந்திர கட்சி உறுப்பினர்கள்?
Reviewed by Author
on
July 19, 2015
Rating:
Reviewed by Author
on
July 19, 2015
Rating:


No comments:
Post a Comment