வன்னி தேரதல் மாவட்டம் ஒரு பார்வை -
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் இம்முறை 261,422 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஆறு பேரை தெரிவு செய்வதற்கு 19 அரசியல் கட்சிகளும், 11 சுயேச்சை குழுக்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளன. இவற்றுள் புதிய சிகல உருமய கட்சியினதும், ஒரு சுயேச்சை குழுவினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. எனவே 6 பேரை தெரிவு செய்வதற்கு மொத்தம் 252 பேர் போட்டியிட உள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்புஇஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்புமனுவை அதன் தலைமை வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்புமனுவை அதன் தலைமை வேட்பாளரான குலசிங்கம் கபிலன் தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
இன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சிஇ ஸ்ரீP லங்கா முஸ்லிம் காங்கிரஸ, மக்கள் விடுதலை முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணி, பிரiஐகள் முன்னனி, ஈழவர் ஐனநாயக முன்னனி, முன்னனி சோசவிசக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைமை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹ{னைஸ் பாரூக் தலைமையில், ஸ்ரீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப. உதயராசா ஆகிய இருவரும் வருகை தந்து வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இவர்களுடன் கடந்த வவுனியா நகர சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவான சுரேன் மாஸ்டர் இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடுகிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனுவை அதன் தலைமை வேட்பாளரும், அமைச்சருமான ரி;;;சாட் பதியுத்தீன் தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரோஹன கமகே ஆகியோர் தாக்கல் செய்தனர்.
ஸ்ரீP லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்புமனுவை அதன் தலைமை வேட்பாளரும் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலி பாவா பாருக் தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வேட்புமனுவை அதன் தலைமை வேட்பாளரான சிவபாதம் கஐநே;திரகுமார் தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் வேட்புமனுவை அதன் தலைமை வேட்பாளரும், அக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் உபாலி சமரசிங்க தலைமையில் தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்புமனுவை அதன் தலைமை வேட்பாளரும், 2004 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பிலும், இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பிலும் போட்டியிட்ட சிவநாதன் கிசோர் தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளருமான ஸ்ரீ ரங்காவின் கட்சியான பிரஜைகள் முன்னணியின் வேட்புமனுவை அதன் தலைமை வேட்பாளரான இராமசாமி சுப்பிரமணியம் தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
GTN
வன்னி தேரதல் மாவட்டம் ஒரு பார்வை -
Reviewed by NEWMANNAR
on
July 14, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 14, 2015
Rating:


No comments:
Post a Comment