"சர்வதேச விசாரணை மூலமே தீர்வு சாத்தியம்''
சர்வதேச விசாரணை மூலமே தமிழ்த்தேசிய இனத்தின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். எமக்கு உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட சர்வதேச போர்க்குற்ற விசாரணை அறிக்கை செப்டெம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும். அதையொட்டியே போர்க்குற்ற விசாரணை தொடரும் அப்படி தொடரும் என்பதால் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
ஐ.நா.மனித உரிமை பேரவையிடம் தொடர்ந்தும் சர்வதேச விசாரணை வேண்டும் என்றே கோருகிறோம். இறுதி யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரான காலத்திலும் நடந்தேறிய படுகொலைகள், அநீதிகள் தொடர்பில் உண்மைகள் வெளிவரவேண்டும்.
போர்க்குற்றம் நடந்ததற்கான காரணங்களை அறிவதன் மூலம் தமிழ்த் தேசிய இனத்தின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பொறிமுறை உருவாகுவதற்கான சாத்தியம் ஏற்படும். ஏற்கனவே இவ்விடயம் மனித உரிமைப் பேரவையின் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த கால அரசாங்கம் ஐ.நா.விசாரணை இடம்பெற ஒத்துழைப்பையோ அனுமதியையோ வழங்க மறுத்துவந்தது. இந்நிலையில் வரப்போகும் அரசு இதற்கு அனுமதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சர்வதேச விசாரணை முழுமையாக நிறைவேற்றப்படாது விட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச நாடுகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் என்றார்.

Reviewed by NEWMANNAR
on
July 18, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 18, 2015
Rating:

No comments:
Post a Comment