75,000 பொலிஸார் பாதுகாப்பு குழப்பம் விளைவித்தால் உச்ச அதிகாரம் பயன்படுத்தப்படும்...
பொது தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு கடுமையாகப் பலப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
தேர்தல் ஆரம்பிக்கப்படுவது முதல் பெறுபேறுகள் வெளிவரும் வரை தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வேட்பாளர்கள். ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது சூழ்நிலைக்கேற்ப பொலிஸ் அதிகாரம் பயன்படுத்தப்படு மென்றும் அவர் எச்சரித்தார். இதற்கமைய, தேவையேற்படின் வன்முறைகளுக்கு காரணமானவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தவும் பின்வாங்க மாட்டோமென்று அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அமைதியான சூழலை நிலை நிறுத்த பொலிஸ் திணைக்களம் உத்தரவா தம் அளிப்பதனால், வாக்காளர்கள் அச்சம் கலைந்து வாக்களிப்பு நட வடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென வும் பொலிஸ் பேச்சாளர் கேட்டுக் கொண்டார்.
அதேநேரம், வாக்களிப்பு நிலையத்தி லிருந்து ஆகக்கூடியது 500 மீற்றர் தொலைவில் பொதுமக்கள் கூட்டமாக கூடிநிற்பது மற்றும் உரக்கப் பேசுவது என்பன தேர்தல் விதிகளை மீறும் செயல்கள் ஆகையினால் அதனை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டிய பொலிஸ் பேச்சாளர் இல்லையேல், மக்கள் கூட்டத்தை கலைக்க ஆகக்கூடிய பொலிஸ் அதிகாரம் பயன்படுத்தப்படுவது உறுதியென்றும் அவர் கூறினார்.
இதேவேளை, தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்னவின் ஏற்பாட்டில் இம்முறை 75 ஆயிரத்துக்கு அதிகமான பொலிஸார் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் 63 ஆயிரம் பொலிஸாரும் 07 ஆயிரத்துக்கு அதிகமான சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் 04 ஆயிரத்துக்கு அதிகமான பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் நேற்று முதல் பாதுகாப்பு கடமைகளை முன்னெடுக்கின்றனர்.
ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையத்திற்கும் இரண்டு பொலிஸார் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு மேலதிகமாக இம்முறை விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும் வாக்கெடுப்பு நிலையங்களில் பாது காப்பு கடமைகளுக்காக நியமிக்கப்பட் டுள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
வாக்குப் பெட்டிகளை வாக்கெடுப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் நேற்று காலை முதல் ஆரம்பமான நிலையில் ஒரு பொலிஸாரை நேரடியாக வாக்கெடுப்பு நிலையத்திற்கும் மற்றைய பொலிஸாரை வாக்குப் பெட்டி எடுத்துச் செலலும் பணிகளுக்காகவும் நிய மிக்கப் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளுக் காக நேற்று முதல் 2 ஆயிரத்து 885 மோட்டார் சைக்கிள்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அமைதியான சூழல் நிலவுகின்ற போதிலும் ஒரு வாக்கெடுப்பு நிலையத்திற்கு இரண்டு என்ற வீதத்தில் கலகத்தடுப்பு பொலிஸார் இரண்டு இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதுடன் சுமார் 300 இற்கு அதிகமான வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
75,000 பொலிஸார் பாதுகாப்பு குழப்பம் விளைவித்தால் உச்ச அதிகாரம் பயன்படுத்தப்படும்...
Reviewed by Author
on
August 17, 2015
Rating:

No comments:
Post a Comment