குற்றவியல் சட்டத்தின் கீழ் வேட்பாளர்களை கைது செய்யலாம்: மஹிந்த தேசப்பிரிய
நாட்டின் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கைது செய்ய தடையில்லை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் எந்தவொரு நேரத்திலும் எந்தவொரு நபரையும் கைது செய்யவும் விசாரணை செய்யவும் முடியும். இதற்கு தேர்தல்கள் செயலகம் எந்த வகையிலும் இடையூறாக இருக்காது.
தேர்தல் முடிவடையும் வரையில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடாது என்ற தீர்மானம் தேர்தல் செயலகத்தில் எடுக்கப்பட்டது.
தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற கட்சிச் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த யோசனைக்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்திருந்தனர்.
இந்தக் கூட்டத்தின் போது எதிர்வரும் 18 ஆம்; திகதி வரையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அழைத்து விசாரணை செய்வதில்லை என தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை தடுக்க முடியாது என அவர் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளைஇ தேர்தல் சட்டங்களை மீறியமை பொலிஸாருக்கு இடையூறு விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டின் பேரில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரும் பொது ஜன பெரமுன கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளருமான கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்த மத்துகம பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேர்தல் சட்டத்தை மீறியமை, பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் குற்றமாக கருதப்படும் செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்படவுள்ளதாகவும் பெரும்பாலும் தேர்தலுக்குப் பின்னரே அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
கடந்த 08 ஆம் திகதி சனிக்கிழமை வெலிப்பன பொலிஸ் பகுதியில் நாகபாம்பு சின்னத்தில் போட்டிடும் பொது பல சேனாவின் அரசியல் கட்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட போதும் பொலிஸாரின் அனுமதியின்றி விஹாரை ஒன்றுக்குள் பிரசாரக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது
குற்றவியல் சட்டத்தின் கீழ் வேட்பாளர்களை கைது செய்யலாம்: மஹிந்த தேசப்பிரிய
Reviewed by Author
on
August 13, 2015
Rating:

No comments:
Post a Comment