அண்மைய செய்திகள்

recent
-

உரிமை மீறல் குறித்தான உள்நாட்டு விசாரணை தொடர்பில் அமெரிக்காவுக்கு விளக்கம்...


மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிப்பது தொடர்பாக அமையவுள்ள உள்நாட்டு விசாரணை கட்டமைப்பு பற்றி அரசாங்கத்தினால் அமெரிக்காவுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான நடவடிக்கைகள் குறித்த அதன் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்விடயம் தொடர்பில் அமைச்சரினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்ட பிஸ்வால், ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா தனது பூரண ஆதரவை வழங்கும் என்பதை உறுதிப்படுத்துவதே தங்களது சுற்றுப்பயணத்தின் நோக்கம் என்றார்.

இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நாவின் மனித உரிமை சபையினால் நடாத்தப்பட்ட விசாரணை அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படவுள்ள நிலையிலேயே பிஸ்வாலின் இலங்கைப் பயணம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


உரிமை மீறல் குறித்தான உள்நாட்டு விசாரணை தொடர்பில் அமெரிக்காவுக்கு விளக்கம்... Reviewed by Author on August 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.