உலகிலேயே மிகவும் பெரிய விமானம்...
உலகிலேயே மிகவும் பெரிய விமானமானது எதிர்வரும் 2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளது. இறக்கைகளுக்கிடையே சுமார் 365 அடி அகலத் தைக் கொண்ட இந்த விமானத்திற்கு ஸ்ராதோலான்ச் கரியர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த விமானம் அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்திலுள்ள மொஜவ் எயார் அன்ட் ஸ்பேஸ்போர்ட் தளத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. ஆறு 747 வகை இயந்திரங்களைக் கொண்ட மேற்படி விமானத்தின் நிறை 1,200,000 இறாத்தலாகும். அது பூமிக்கு மேலாக 180 கிலோமீற்றர் தொடக்கம் 2000 கிலோமீற்றர் வரையான உயரத்தில் பயணிக்கக் கூடியதாகும். இந்த விமானத்தை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டில் பொதுப் பாவனைக்கு விட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகவும் பெரிய விமானம்...
Reviewed by Author
on
August 07, 2015
Rating:

No comments:
Post a Comment