அமைச்சர் றிஸாட் பதியுதீன் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்.
மன்னார் உப்புக்குளம் மீனவர்களின் இறங்கு துறை தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் தாக்கால் செய்யப்பட்ட முறைப்பாடு மீதான வழக்கு விசாரனை இன்று(6) வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றில் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று நீதி மன்றில் ஆஜராகியிருந்தார்.
வழக்கு விசாரைணயின் போது மன்றில் ஆஜராகியிருந்த இரகசிய பொலீஸ் அதிகாரி சட்டமா அதிபரின் அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்று மன்றில் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணையினை எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை மன்னார் நீதவான் ஒத்திவைத்தார்.
-அமைச்சர் றிசாத் பதியுதீன் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீனின் வழிகாட்டலில், சட்டத்தரணிகளான ருஸ்தி ஹபீப்,ரமீஸ் பஷீர்,சப்ராஸ் ஹம்ஸா ஆகியோர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் றிஸாட் பதியுதீன் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்.
Reviewed by NEWMANNAR
on
August 06, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 06, 2015
Rating:

No comments:
Post a Comment