ஹெலிகொப்டரில் பறந்து சென்று ஆவிகளை விரட்டிய பாதிரியார்: விநோத சம்பவம்...
இத்தாலியில் பாதிரியார் ஒருவர் ஹெலிகொப்டரில் பறந்து சென்று ஆவியை விரட்டியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியின் நேப்பின்ஸ் அருகே கேஸ்டெலாமேர் டி ஸ்டாபியா என்ற நகரத்தில் உள்ள மக்கள் பேய் பீதியில் உறைந்துபோயிருந்தனர்.
ஏனெனில், அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின, மேலும் அப்பகுதியில் புனிதத்தன்மை பாழகி வருவதாக உணர்ந்த மக்கள் இவை அனைத்தும் ஆவிகளின் கெட்ட செயல் தான் என பீதியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்நகரில் உள்ள ஆவிகளை விரட்டுவதற்காக பாதிரியார் ஒருவரை அணுகியுள்ளனர்.
பாதிரியாரும், நகரின் மீது பறந்து சென்று ஆவி மற்றும் தீய சக்திகளை விரட்ட முடியும் என்று கூறியதைத் தொடர்ந்து, அதற்கு ஹெலிகொப்டர் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சிலுவையுடன் ஹெலிகொப்டரில் பறந்துசென்ற பாதிரியார் பிரார்த்தனை செய்து ஆவியை விரட்டி அந்நகருக்கு ஆசி வழங்கியுள்ளார்.
இதன் மூலம், தங்கள் நகரம் மீண்டும் வளம் பெறும் என அப்பகுதி மக்கள் நம்பியுள்ளனர்.
ஹெலிகொப்டரில் பறந்து சென்று ஆவிகளை விரட்டிய பாதிரியார்: விநோத சம்பவம்...
Reviewed by Author
on
August 01, 2015
Rating:

No comments:
Post a Comment